எங்கே போவேனோ, நீ என்னை நீங்கிவிட்டால்
எங்கே போவேனோ, என் இதையத்தை வாங்கிவிட்டால்
எங்கே போவேனோ, என் கண்ணை கீறிவிட்டால்
எங்கே போவேனோ, என்னை வார்த்தையில் கொன்றுவிட்டால்
கூண்டுக்குள் இருக்கும் பறவை நான்.. என் கண்ணிலே
ஒரு துண்டு வானம், நீதானடி..
எங்கே போவேனோ, நீ என்னை நீங்கிவிட்டால்
எங்கே போவேனோ, என்னை வார்த்தையில் கொன்றுவிட்டால்
தீராது வானின் வழி
எதிர்க்காற்றில் போகும் கிளி
இரை தேடி வாடும் வலி
கூடென்று காட்டும் விதி
பந்தாடுதே, என்னை வாழ்தலின் நியாயங்கள்
சம்பாதித்தே தீருமோ ஜென்மம்
கொலை போல தானா, பெண்கள் வீசிடும் வார்த்தையும்
வழிகின்றதே துக்கம் தான்..
….நீ என்னை நீங்கிவிட்டால்
எங்கே போவேனோ, என்னை வார்த்தையில் கொன்றுவிட்டால்
தெய்வங்கள் இங்கே இல்லை
இருந்தாலும் இரக்கம் இல்லை
கழுத்தோடு கல்லை கட்டி
கடலோடு போட்டாள் என்னை
மரணத்தை தானா, இந்த காதலும் கேட்குது
பொய் வேஷமே உள்ளதே எங்கும்
இல்லாமை தானா, இங்கு காதலை மாய்ப்பது
என் சூழ்நிலை கொல்லுதே ..
….நீ என்னை நீங்கிவிட்டால்
எங்கே போவேனோ, என்னை வார்த்தையில் கொன்றுவிட்டால்
கூண்டுக்குள் இருக்கும் பறவை நான்.. என் கண்ணிலே
ஒரு துண்டு வானம், நீதானடி..
எங்கே போவேனோ, என்னை வார்த்தையில் கொன்றுவிட்டால்