மெல்ல சிரித்தால் காதல் தான்
மின்னல் அடித்தால் காதல் தான்
கண் இமைத்தால் காதல் தான்
கைய சேர்த்தால் காதல் தான்
துள்ளி குதித்தால் காதல் தான்
தொட்டு அனைத்தால் காதல் தான்
முத்தம் கொடுத்தால் காதல் தான்
மூச்சைப் பரித்தால் காதல் தான்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
காதலித்துப்பார் காலம் வென்றிடும்
தெருவிளக்கெங்கும் நிலா தென்படும்
காதலித்துப்பார் பாடப்புத்தகம்
கவிதைத்தொகுப்பாகும்
காதலித்துப்பார் வேர்வை மின்னிடும்
இருமிய சத்தம் இசை ஆகிடும்
காதலித்துப்பார் பூமி மொத்தமும்
புதிதாய் உருமாறும்
காதலித்துப்பார் உண்மையில்
கைது செய்யலாம் காற்றையும்
காதலித்துப்பார் நண்பனாய்
வாழத்தோன்றுமே நாளையும்
தேவதைகளின் ஆசிதானே
காதலென்று கூறுகின்றேன்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
காதலிப்பதால் வானவில்லினை நீ
குடைகளுக்குள்ளே நாளும் வைக்கலாம்
காதலிப்பதால் மூளை எங்கிலும்
குடையும் சந்தோஷம்
காதலிப்பதால் வீட்டுத் திண்ணையும்
அரசவைக் கட்டில் போல மாறிடும்
காதலிப்பதால் தேகச் செல்களில்
பரவும் மின்சாரம்
காதலிப்பதால் கங்கையும்
வந்து சேருமே கோப்பையில்
காதலிப்பதால் புன்னகை
நீளமாகுமே வாழ்க்கையில்
சாலைக்கற்களும் சாமியும் இங்கு
பாடலாமே காதல் செய்தால்
கைது செய்யலாம் காற்றையும்
காதலித்துப்பார் நண்பனே
வாழத்தோன்றுமே நாளையும்
தேவதைகளின் ஆசிதானே
காதலென்று கூறுகின்றேன்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்