ஆண்: ராங்கி ரங்கம்மா... ரவிக்கை எங்கம்மா...
ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா...
ஏங்கி என்னம்மா ஏக்கம் தானம்மா நீ வாம்மா...
பெண்: ஆசை தோசை அப்பளம் வடடா நீ
ஆளப்பாரு அல்வா கடடா நீ
ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை
கத்தாமக் கத்துது கட்டிலுமேல
பெண்: குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாமப் பத்துது பொம்பளை ஆசை (ராங்கி ரங்கம்மா...)
(இசை...)
பெண்: நெய் வாழை போட்டுவச்சேன் வச்சேன் வா மாமா
ஆண்: எலமேல உன்னை வச்சி வச்சித்தின்னலாமா
பெண்: வாசம் பார்க்க வாசம் பார்க்க மேயாதே
நேரம் பார்த்து நெஞ்சு மேலே சாயாதே
ஆண்: பட்டா போட்ட இடம் நீதாண்டி
பங்கு கேட்கப் போறேன் நான்தாண்டி
பெண்: குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாமப் பத்துது பொம்பளை ஆசை
ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை
கத்தாமக் கத்துது கட்டிலுமேல (ராங்கி ரங்கம்மா...)
(இசை...)
ஆண்: குல்கந்து குட்டிப்போட்டு தந்த பூ நீயா
பெண்: கல்க்கண்டு கட்டில்போட்டு செஞ்ச தீனியா
ஆண்: உப்புப்போட்டு ஊர வச்ச மாம்ப்பிஞ்சு
எச்ச பண்ணிப் பிச்சித்தாறேன் நான்வந்து
பெண்: மஞ்சப்பூசி மச்சம் மறைச்சேனே
ஒன்னப் பார்த்து வெக்கம் தொலைச்சேனே
ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை
கத்தாமக் கத்துது கட்டிலுமேல
பெண்: குத்தாம குத்துது ஆம்பல மீசை
பத்தாமப் பத்துது பொம்பளை ஆசை (ராங்கி ரங்கம்மா...)