முதல் எழுத்தே மோகமானால் முடிவுரைதான் என்ன ஆகும்

இதழ் எழுத்தே வேதமானால் இசை படித்தால் என்ன ஆகும்
மலர் தொடுத்தால் மாலை ஆனால் மனம் தொடுத்தால் என்ன ஆகும்
மணியே மணியே ஹோ ஹோ ஹோ

கனி இதழில் காதல் ராகம் கனிவாய் அரங்கேறுமே
நுனி விரலில் நூறு பாவம் இனிதாய் ஸ்வரம் பாடுமே
முடிமுதலாய் பாதம் வரைக்கும் மூன்றுலகம் தோன்றுமே
அடி எடுத்தே பாட நினைத்தால் ஆசை என்னை மீருமே
மலரே மணமே மயங்கும் மனமே
மறந்தேன் எனை மறந்தேன் நானே
பிறந்தேன் உன் நினைவால் தானே
முதல் எழுத்தே மோகமானால் முடிவுரைதான் என்ன ஆகும்
இதழ் எழுத்தே வேதமானால் இசை படித்தால் என்ன ஆகும்
மலர் தொடுத்தால் மாலை ஆனால் மனம் தொடுத்தால் என்ன ஆகும்
மணியே மணியே ஹோ ஹோ ஹோ
முதல் எழுத்தே மோகமானால் முடிவுரைதான் என்ன ஆகும்
தனியாய் இவள் வாடும்போது துணை நீ வரவேண்டுமே
பனியால் உடல் மூடும் போர்வை கனிவாய் தர வேண்டுமே
இடைவெளியே ஏது நமக்கு இறுதிவரை யோகமே
இடயிடயே ஏழு இசையால் இளைப்பாரிட வேண்டுமே
அழகே அமுதே அன்பின் விருந்தே
பரந்தேனடி வானம் வரயில்
விழுந்தேன் இந்த காதல் சிரயில்