போதும் போதும் என்கிறாய்
தீரும் முன்னே கேட்கிறாய்
இன்னும் இன்பம் வேண்டுமா?
போ விரட்டு!
ஏதோ ஒன்றைத் தேடி
கண் மூடி நாம் போவோம்
தேடல் எல்லாம் தீர்ந்தால்,
எங்கு சென்று சேர்வோம்?
பூமியில் உள்ளது யாவுமே உன்னது - காசு விரட்டு
விட்டதும் ஓடிடும் சட்டெனெ மாறிடும் - காலம் விரட்டு
நெஞ்சினை விட்டொரு நெஞ்சினில் தாவிடும் - காதல் விரட்டு விரட்டு!
கண்ணிமைக்கும் நேரத்திலே என்னை
கொள்ளையிட்டுப் போகின்றாய்
மிச்சம் மீதி இல்லாமல் நெஞ்சை
அள்ளிக்கொண்டு போகின்றாய்
அள்ளாமல்.... ஊறாதே... எந்நாளும்... தீராதே,
நில்லாமல்... என்னோடு... வா தீயே!
அத்தனை முத்தமும் மொத்தமாய் இட்டிடு... காமம் விரட்டு
எத்தனை பூக்களில் எத்தனை தேன் துளி... போதை விரட்டு
செத்திடும் போதிலும் மூச்சுள்ள மட்டிலும்… கனவை விரட்டு விரட்டு!