வானத்தையே எட்டிப் பிடிப்பேன் பூமியையும் சுற்றி வருவேன்
வானத்தையே எட்டிப் பிடிப்பேன் பூமியையும் சுற்றி வருவேன்
உன் கண்ணுக்குழி அழகில் தான்
என் கற்பனைய நான் வளர்த்தேன்
உன் நெஞ்சுக்குழி மீது தான்டி
என் நிம்மதிய நான் புதைச்சேன்
அடி பெண்ணே நீயும் பெண் தானோ
இல்ல பிரம்மன் செஞ்ச சிலை தானோ
அடி பெண்ணே நீயும் பெண் தானோ
இல்ல பிரம்மன் செஞ்ச சிலை தானோ
வானத்தையே எட்டிப் பிடிப்பேன் பூமியையும் சுற்றி வருவேன்
மணலில் கட்டி வைத்த கோட்டை
அதை மழை வந்து கரைத்தென்ன?
எனக்குள் கட்டி வைத்த கோட்டை
அதை நீ வந்து உடைத்ததென்ன?
உள் நெஞ்சம் எனக்குள்ளே அய்யோ உன் பேரை சொல்கிறேதே
என்னை விட்டு உயிர் போகும்
அந்த உயிர் வந்து உன்னைச் சேரும்
நான் உயிரோடு தான் வாழ்ந்தா
பெண்ணே உனக்காக காத்திருப்பேன்
வானத்தையே எட்டிப் பிடிப்பேன் பூமியையும் சுற்றி வருவேன்
மெழுகு போல் உருகினேனே நீ தீயாக சுட்டதினால்
நீரினில் மூழ்கிக் கொண்டு நான் நீருக்கு அலைந்தேனே
கண் பார்த்த பார்வைகளை உன் உதடுகள் பொய் சொல்லலாம்
கானல் நீர் கண்டதை என் இதயத்தில் மறந்திடுமோ
புள்ளி வைத்து கோலம் போட்டால் நல்ல சித்திரம் ஆகிடுமா?
வானத்தையே எட்டிப் பிடிப்பேன் பூமியையும் சுற்றி வருவேன்
வானத்தையே எட்டிப் பிடிப்பேன் பூமியையும் சுற்றி வருவேன்