தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா
தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா
மழையின் நீர் வாங்கி
மலையே அழுவது போல்
தாயின் உயிர் தாங்கி
தனயன் அழுவானோ
உயிரை தந்தவளின்
உயிரை காப்பானா
கடனை தீர்ப்பானா
ஏ
தங்கம் போலே இருந்தவள் தான்
சருகை போலே ஆனதனால்
சிங்கம் போல இருந்த மகன்
செவிலியை போல ஆவானா
தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா
—
ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா
ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா
நீ சுமந்த பிள்ளையாய்
நான் இருந்தேன் அம்மா
நான் சுமக்கும் பிள்ளையாய்
நீ ஆனாய்….அம்மா
எனக்கு எதும் ஆனதுனா
உனக்கு வேறு பிள்ளை உண்டு
உனக்கு எதும் ஆனதுனா
எனக்கு வேறு தாய் இருக்கா
ஏ
நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை
கண்ணில் மணியாய் சுமந்தவளை
மண்ணில் விட்டு விடுவானா
மனதில் மட்டும் சுமப்பானா
—
தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா
தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா
—
தாயின் மடி தானே
உலகம் தொடங்கும் இடம்
தாயின் காலடியே
உலகம் முடியும் இடம்
உயிரை தந்தவளின்
உயிரை காப்பானா
கடனை தீர்ப்பானா
ஏ
கருணை தாயின் நினைவினிலே
கல்லும் கொஞ்சம் அழுது விடும்
கண்ணீர் துளிகள் விழுந்த பின்னே
கண்ணின் மணியும் விழுந்துவிடும்
—
தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா
தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா
இல்லை தாயுமனவனா
இல்லை தாயுமனவனா