மொட்டவிழ்ந்த சிறுபூக்கள் ஒரு மெட்டெடுத்து இசை பாட
சொட்டுகின்ற புது தேனி இள வண்டு வந்து விளையாட
காத்து காத்து தினம் காத்து ஒரு காத்தும் வந்தாச்சு
பாத்து பாத்து எதிர்ப்பாத்து ஒரு பாட்டும் வந்தாச்சு
காதோரம் பாட்டு சத்தம் காலை மாலை கேட்கும்
காட்டோரம் பாட்டு கேட்டு நூறு பூக்கள் பூக்கும்
தொடுவானம் தொட போகும் போது தூரம் தூரம் போகும்
இருந்தாலும் அதை தீண்டி பார்க்கும் காலம் வந்து சேரும்

மொட்டு பொன்னந்தி நேரம் பூவாவது
பூவு பின்னாளில் நூறு பிஞ்சாவது
பிஞ்சு மெல்லத்தான் முத்தி காயாவது
காய் தித்திக்கும் நல்ல கனியாவது
நான் போட்ட தோட்டங்கள் பிள்ளைகள் கூட்டங்கள்
பூவாகி பிஞ்சாகி காயாகி, கனியாகி
நானொரு தென்றல் என்று பாடிடும் பாடல் ஒன்று
காலை மாலை இனிமையே
காத்து காத்து தினம் காத்து ஒரு காத்தும் வந்தாச்சு
பாத்து பாத்து எதிர்ப்பாத்து ஒரு பாட்டும் வந்தாச்சு
காதோரம் பாட்டு சத்தம் காலை மாலை கேட்கும்
காட்டோரம் பாட்டு கேட்டு நூறு பூக்கள் பூக்கும்
தொடுவானம் தொட போகும் போது தூரம் தூரம் போகும்
இருந்தாலும் அதை தீண்டி பார்க்கும் காலம் வந்து சேரும்
வானம் புதுவானம் அது எப்போதும் எல்லைகள் இல்லாதது
பூமி புதுபூமி அது எந்நாளும் நம் கையில் உண்டாவது
முள்ளென கல்லென்ன நீ தொட்டு பூவாகும்
சொல்கின்ற சொல்லெல்லாம் நீ சொல்ல பொன்னாகும்
நிலவுக்கு பாதை போடு நீயங்கு வீடு கட்டு
வா வா போவோம் பயணம்