என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
கண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்ற வில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே
வந்து சேர்ந்து விடு என்னை சேர விடு இல்லை சாக விடு
சூரியன் சந்திரன் வீழ்ந்ததிந்து போய் விடும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே இந்த பூமியிலே ஒளி கூடிடுவோம்
காதலர் கண்களே சூரியன் சந்திரன் ஆகாதோ
கைகள் நான்கும் தீண்டும் முன்னே
கண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளை விடுமே
கண் பார்வை முதல் நிலையே
ஆருயிரே என்னுயிரே உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
என்னுயிரே காதலில் இரண்டாம் நிலைதான் பால் மயக்கம்
மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
இது காதலின் மூன்றாம் படி நிலையோ
என் உடல் வழி அமிர்தம் வழிக்கின்றதோ
என் உயிர் மட்டும் புது வித வழி கொண்டதோ
என்னுயிரே என்னுயிரே உன்னை கொஞ்சம் தீண்டுவேன்
ஏழ்வகை காதலை எப்போதிங்கே தாண்டுவேன்
இதில் நான்காம் நிலையை அடைந்து விட்டேன்
என் நருமலரே உன்னை தொழுது விட்டேன்
என் சுய நினைவென்பதை இழந்து விட்டேன்
அந்த சூரியன் எழும் திசை மறந்து விட்டேன்
(கண்கள் தாண்டி..)
என் உடல் பொருள் தந்தேன் சரன் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலில் ஐந்து நிலை
நான் உன் கையில் நீ திவலை
ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை
நம் காதலிலே இது ஆறு நிலை
(என்னுயிரே..)