கோபமா என் மேல் கோபமா
பேசம்மா ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன்
பார்வையாறு வந்து பாய்ந்திடுமா
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்
ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
உள்ளூயிரே உருகுதம்மா... ஆ..
கோபமா என்மேல் கோபமா
பேசம்மா ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன்
பார்வையாறு வந்து பாய்ந்திடுமா
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்
ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
உள்ளூயிரே உருகுதம்மா... ஆ..
கோபமா என்மேல் கோபமா
உன் பார்வை வடிக்கின்ற பாலோளியில் என் வானம் விடியுமடி
உன் பாதம் படிகின்ற சிறு துகளில் என் ஆவி துடிக்குதடி
கோபமா என்மேல் கோபமா
என் மார்பு கீறடி பெண்ணே
அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே
என் மார்பு கீறடி பெண்ணே
அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே
கண்கள் சாமரம் வீசிடுமா இல்லைக் காயத்தில் கத்தி வீசிடுமா
கோபமா என்மேல் கோபமா
நான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால்
இந்தக் காதல் துயரமில்லை
நீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால்
இந்த ஏக்கம் சிறிதுமில்லை
கோபமா என் மேல் கோபமா
என் கண்ணில் ஏனடி வந்தாய்
என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்
என் கண்ணில் ஏனடி வந்தாய்
என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்
மெளனங்கள் மொழிகளின் வேசமம்மா
மறுமொழி ஒன்று பேசிடம்மா
கோபமா
ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன்
பார்வையாறு வந்து பாய்ந்திடுமா
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்
ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
உள் உயிரே உருகுதம்மா... ஆ..
கோபமா என்மேல் கோபமா
பேசம்மா ஒரு மொழி பேசம்மா
கோபமா என்மேல் கோபமா
பேசம்மா ஒரு மொழி பேசம்மா