ஆண்:என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி
பெண்: பூ ஆச்சி பொண்ணாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா
ஆச்சு என் மூச்சு
ஆண் : உன் நெனப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மலை வெயிலென
பாக்க வேணாம்
மயங்கிட வா டி மனசோட
பெண்: நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறேன் வா மெல்ல
இது வரை நான் பாத்ததில்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல
ஆண்: கண்ணில் நீ வந்து கத பேச
கனவில் உன்னால் சிரிச்சேனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே
ஆண்: உன் ஆசை நான்
என ஆசை நீ
பேராசை ஆவோமா
பெண்:கண் மூடியே கை கோர்த்து தான்
காணமல் போவோமா
ஆண்: எல்லோரும் தூங்கும் போது
காதல் கண்ணில் தூக்கம் இல்ல
பெண்: பொல்லாத காதல் வந்தால்
அக்கம் பக்கம் பார்பதில்ல
ஆண் :அன்பே உன் கண்கள் ரெண்டும்
என் காதல் கண்ணாடி
பெண்:சூரியன் கண் பார்க்கும் முன்னே
நீ வாட முன்னாடி
ஆண் :என்னோடு நீ உன்னோடு நான்
வேறென்ன சந்தேகம்
பெண்:கையோடு வா பின்னிக் கொள்ள
நீதாண்டா சந்தோசம்
ஆண்: நம்மோட யாரும் இல்ல வெக்கம் என்ன வெக்கம் என்ன
பெண்:என்னோடு நானே இல்ல என்ன பண்ண என்ன பண்ண
ஆண்:பாவாடா ராட்டினம் போலே நீ என்ன சுத்தாத
பெண்:உன் மீச முள்ளாலேரோசாவே குத்தாத
ஆண்:என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி
பெண்: பூ ஆச்சி பொண்ணாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா
ஆச்சு என் மூச்சு
ஆண்:உன் நெனப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மழை வெயிலென
பாக்க வேணாம்
மயங்கிட வா டி மனசோட
பெண்:நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறேன் வா மெல்ல
இது வரை நான் பாத்ததில்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல
ஆண்:கண்ணில் நீ வந்து கத பேச
கனவில் உன்னால் சிரிச்சேனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே