துட்டு துட்டு துட்டு துட்டு ஒவ் ஒவ்
துட்டு துட்டு துட்டு துட்டு ஒவ் ஒவ்
பளபளக்குது புது நோட்டு
எனை இழுக்குது வலை போட்டு
கடைசியில் ஒரு எல போட்டு
கை தொடைக்கணும் புது நோட்டு
காஷ்மீரை விலை கேட்டு காசாலே கொடியேற்று
சொர்க்கம் சென்று அந்த கதவு தட்டு விசிட்டிங் கார்டு காட்டு
கார்ட காட்டி அது தொரக்கலையா காந்தி நோட்ட நீட்டு
துட்டு துட்டு துட்டு துட்டு ஒவ் ஒவ்
துட்டு துட்டு துட்டு துட்டு ஒவ் ஒவ்
பளபளக்குது புது நோட்டு
எனை இழுக்குது வலை போட்டு
கடைசியில் ஒரு எல போட்டு
கை தொடைக்கணும் புது நோட்டு
money money money money makes many things
money money money money makes many things
சின்ன பொன்னுங்களின் சைட்டும் கொடுக்கும்
பின்பு பபைட்டும் கொடுக்கும் இந்த துட்டு துட்டு
புது கவர்மெண்ட்டு அமைச்சு கொடுக்கும்
பின்பு அதையும் கவுக்கும் இந்த துட்டு துட்டு
உலகம் என்பது உருண்டு கிடக்குது
துட்டு சக்கரம் மாட்டிகிட்டு
அந்த வண்டியில் மனிதன் போகிறான்
ரெண்டு கண்ணையும் மூடிகிட்டு
காசு தேடி போவோமா எக்கா சித்தக்கா
கருவில் இருந்து காடு வரை எல்லாம் துட்டக்கா
காசு தேடி போவோமா எக்கா சித்தக்கா
கருவில் இருந்து காடு வரை எல்லாம் துட்டக்கா
பளபளக்குது புது நோட்டு
எனை இழுக்குது வலை போட்டு
கடைசியில் ஒரு எல போட்டு
கை தொடைக்கணும் புது நோட்டு
சின்ன சின்ன சின்ன நரிய பிடித்து
ஒரு சிங்கத்தில் அமர்த்தும் இந்த துட்டு துட்டு
வட்ட வட்ட வட்ட வளையம் பிடித்து
அதில் ஒட்டகம் நுழைக்கும் இந்த துட்டு துட்டு
கல்லறை மூடியும் கதவு திறக்குமே
சில்லரை ஓசையை கேட்டுபுட்டு
ஜாதி மதமெல்லாம் ஒழிஞ்சி போகுமே
பச்ச நோட்ட தான் பாத்துபுட்டு
காசு தேடி போவோமா எக்கா பெரியக்கா
கையில் காசு வச்சிருந்தா தப்பும் சரியக்கா
காசு தேடி போவோமா எக்கா பெரியக்கா
கையில் காசு வச்சிருந்தா தப்பும் சரியக்கா
பளபளக்குது புது நோட்டு
எனை இழுக்குது வலை போட்டு
கடைசியில் ஒரு எல போட்டு
கை தொடைக்கணும் புது நோட்டு
காஷ்மீரை விலை கேட்டு காசாலே கொடியேற்று
சொர்க்கம் சென்று அந்த கதவு தட்டு விசிட்டிங் கார்டு காட்டு
கார்ட காட்டி அது தொரக்கலையா காந்தி நோட்ட நீட்டு
துட்டு துட்டு துட்டு துட்டு ஒவ் ஒவ்
துட்டு துட்டு துட்டு துட்டு ஒவ் ஒவ்