என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
பின்னால பொறந்ததினால் இளையவளா
முன்னால இறந்ததினால் மூத்தவளா
தங்கையா பொறந்தாளே தாயாய் வளர்ந்தாளே
தனியாய் பரந்ததினால் தெய்வமாய் ஆணாளே
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
இருக்கும் போதினிலே உலகம் தெரியல
நீ போன பின்னாலே உலகம் பெரிதில்ல
என்ன நெனப்பிலடி போயி தொலஞ்சுபுட்டே
இருக்கும் உயிருக்கெல்லாம் கொள்ளி வெச்சுப்புட்டே
வரத்த வாங்கி வாழவிட்டியா
அடி உன்ன நீயே பெத்துவிட்டியா
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
எந்த பயத்திலடி கண்ண மூடிட்ட
யார் போட்ட கணக்கிலடி உயிர நிறுத்திட்ட
பெத்த மனசுகுள்ள ரத்தம் உரைய வெச்ச
எங்க போரதுக்கு சொமய எறக்கி வெச்ச
வரத்த வாங்கி வாழவிட்டியா
அடி உன்ன நீயே பெத்துவிட்டியா
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
பின்னால பொறந்ததினால் இளையவளா
முன்னால இறந்ததினால் மூத்தவளா
தங்கையா பொறந்தாளே தாயாய் வளர்ந்தாளே
தனியாய் பரந்ததினால் தெய்வமாய் ஆணாளே
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே