பெண் : புத்தம் புது பூமி வேண்டும்
ஆண் : நித்தம் ஒரு வானம் வேண்டும்
பெண் : தங்க மழை பெய்ய வேண்டும்
ஆண் : தமிழில் குயில் பாட வேண்டும்
ஆ&பெ குழு : ஹம்மிங்
ஆண் : புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்
பெண் : புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்
ஆண் : புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்
ஆ&பெ குழு : ஹம்மிங்
***
ஆண் : சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்
பெண் : பெய்ய வேண்டும்
ஆண் : வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்
பெண் : வரம் வேண்டும்
பெண் : கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வர விடு
ஆண் : புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்
பெண் : புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்
***
ஆண் : யுத்தம் இல்லாத பூமி
ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்
பெண் : இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்
பெண் : பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்
ஆ & பெ : போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
ஆண் : தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்
பெண் : புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்
ஆண் : புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்