Taalaattum kaatre

தாலாட்டும் காற்றே
Year
Language

தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலை தூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
என் ஜென்மம் வீணென்று போவேனோ
உன் வண்ண திரு மேனி சேராமால்
என் வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
என் ஆவி சிறிதாகி போவேனோ
என்னுயிரே நீ தானோ
என்னுயிரே நீ தானோ

தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலை தூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா

கண்ணுக்குள் கண் வைத்து கண் இமையால் கண் தடவி
சின்னதொரு சிங்காரம் செய்யாமல் போவேனோ
பேசிழந்த வேளையிலே பெண் அழகு என் மார்பில்
மூச்சு விடும் வாசனையை முகராமால் போவேனோ
உன் கட்டு கூந்தல் காட்டில் நுழையாமல் போவேனோ
அதில் கள்ள தேனை கொஞ்சம் பருகாமல் போவேனோ

நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டானோ
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ
நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில்
அதை உனக்கு ஒளி பரப்ப மாட்டேனோ
என்னுயிரே நீ தானோ
என்னுயிரே நீ தானோ

தாலாட்டும் காற்றே வா
தலைகோதும் விரலே வ

ஒரு நாள் ஒரு பொழுது உன் மடியில் நான் இருந்து
திருநாள் காணாமல் செதொளிந்து போவேனோ
தலையெல்லாம் பூக்கள் பூத்து தள்ளாடும் மரமேறி
இலையெல்லாம் உன் பெயரை எழுத்தாமற் போவேனோ
உன் பாதம் வாங்கி நெஞ்சில் பதியாமற் போவேனோ
உன் பன்னீர் எச்சில் ருசியை அறியாமற் போவேனோ

உன் உடலை உயிர் விட்டு போனாலும்
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ
உன் உடலை உயிர் விட்டு போனாலும்
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ
உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி
நீ வாழும் வரை நானும் வாழேனோ
என் உரிமை நீ தானோ
என் உரிமை நீ தானோ

தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலை தூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
என் ஜென்மம் வீணென்று போவேனோ
உன் வண்ண திரு மேனி சேராமால்
என் வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
என் ஆவி சிறிதாகி போவேனோ
என்னுயிரே நீ தானோ
என்…. உயிரே…. நீ தானோ
நீ தானோ…. நீ தானோ….

tālāṭṭum kāṭre vā
talai kodum virale vā
tŏlai tūra nilave vā
tŏḍa veṇḍum vāṉe vā

uṉ siṉṉa idaḻ muttam tiṉṉāmal
ĕṉ jĕṉmam vīṇĕṇḍru poveṉo
uṉ vaṇṇa tiru meṉi serāmāl
ĕṉ vayadu pāḻ ĕṇḍru āveṉo
uṉ aḻagu rājāṅgam āḽāmal
ĕṉ āvi siṟidāgi poveṉo
ĕṉṉuyire nī tāṉo
ĕṉṉuyire nī tāṉo

tālāṭṭum kāṭre vā
talai kodum virale vā
tŏlai tūra nilave vā
tŏḍa veṇḍum vāṉe vā

kaṇṇukkuḽ kaṇ vaittu kaṇ imaiyāl kaṇ taḍavi
siṉṉadŏru siṅgāram sĕyyāmal poveṉo
pesiḻanda veḽaiyile pĕṇ aḻagu ĕṉ mārbil
mūccu viḍum vāsaṉaiyai mugarāmāl poveṉo
uṉ kaṭṭu kūndal kāṭṭil nuḻaiyāmal poveṉo
adil kaḽḽa teṉai kŏñjam parugāmal poveṉo

nī pādi tūkkattil pulambuvadai
ŏlippadivu nāṉ sĕyya māṭṭāṉo
nī pādi tūkkattil pulambuvadai
ŏlippadivu nāṉ sĕyya māṭṭeṉo
nī ūḍal kŏṇḍāḍum pŏḻudugaḽil
adai uṉakku ŏḽi parappa māṭṭeṉo
ĕṉṉuyire nī tāṉo
ĕṉṉuyire nī tāṉo

tālāṭṭum kāṭre vā
talaigodum virale va

ŏru nāḽ ŏru pŏḻudu uṉ maḍiyil nāṉ irundu
tirunāḽ kāṇāmal sĕdŏḽindu poveṉo
talaiyĕllām pūkkaḽ pūttu taḽḽāḍum marameṟi
ilaiyĕllām uṉ pĕyarai ĕḻuttāmaṟ poveṉo
uṉ pādam vāṅgi nĕñjil padiyāmaṟ poveṉo
uṉ paṉṉīr ĕccil rusiyai aṟiyāmaṟ poveṉo

uṉ uḍalai uyir viṭṭu poṉālum
ĕṉ uyirai uṉṉoḍu pāysceṉo
uṉ uḍalai uyir viṭṭu poṉālum
ĕṉ uyirai uṉṉoḍu pāysceṉo
uṉ aṅgam ĕṅgĕṅgum uyirāgi
nī vāḻum varai nāṉum vāḻeṉo
ĕṉ urimai nī tāṉo
ĕṉ urimai nī tāṉo

tālāṭṭum kāṭre vā
talai kodum virale vā
tŏlai tūra nilave vā
tŏḍa veṇḍum vāṉe vā

uṉ siṉṉa idaḻ muttam tiṉṉāmal
ĕṉ jĕṉmam vīṇĕṇḍru poveṉo
uṉ vaṇṇa tiru meṉi serāmāl
ĕṉ vayadu pāḻ ĕṇḍru āveṉo
uṉ aḻagu rājāṅgam āḽāmal
ĕṉ āvi siṟidāgi poveṉo
ĕṉṉuyire nī tāṉo
ĕṉ…. uyire…. nī tāṉo
nī tāṉo…. nī tāṉo….