ராதா .. ராதா .. ராதா .. ராதா .. ராதா ..
ராஜா.. ராஜா.. ஓ ராஜா..
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா
நல்ல இதயங்கள் பேசிடும் மொழி என்ன சொல்லடி ராதா
அது எட்டிலும் எழுத்திலும் எழுத வராது ராஜா ராஜா ராஜா ஓ
இரு கரங்களை பிடித்ததும் மயங்குவதேனடி ராதா ராதா
அதில் காந்தத்தை போல் ஒரு உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா
நெஞ்சில் இருவரும் இணைந்தபின் திருமணம் ஏனடி ராதா
அது இளமையின் நாடகம் அரங்கத்தில் வருவது ராஜா ராஜா ராஜா ஓ
முதல் இரவென்று சொல்வது ஏனடி வந்தது ராதா ராதா
அது உரிமையில் இருவரும் அறிமுகம் ஆவது ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா