உச்சி முதல் பாதம் வரை உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன் என்னை காதலிக்க சம்மதமா சம்மதமா
பட்டு செல்லும் உன் நிழலை மிக மிக நேசிப்பவன்
என்னை விட யாருமில்லை சொல்லு காதலிக்க சம்மதமா சம்மதமா
இல்லை என்று நீ பொய் சொன்னால் நாளை சம்மதம் கேட்கிறேன்
ஆமாம் என்று உண்மை சொன்னால் இப்பவே மார் அடைப்பில் சாகிறேன்

என்ன செய்யும் இந்த மனது சின்ன வயது உன்னை நினைக்கும் பொழுது
சுத்தி வைத்து நெஞ்சில் அடிப்பது போல் உள்ளம் துடிக்கிறதே கன்னியே
எரிச்சலை கொஞ்சம் எடுத்து வெய்யில் அடித்து அதில் நெருப்பை மடித்து
கண்ணில் வைத்து என்னை அழுத்துகிறாய் அன்பில் கொளுத்துகிறாய் கன்னியே
வலைகளை விரிக்கிறாய்
காதல் தீயில் பற்றி விட்டு கொதிக்கிறாய்
பனி என்னை விழிகளால் உருக்கிறாய்
சந்தியா நீ என் இந்தியா
உச்சி முதல் பாதம் வரை உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன் என்னை காதலிக்க சம்மதமா
காதல் என்னும் பாடம் எடுத்து சொல்லி கொடுத்து ஒரு பரீட்சை நடத்து
நூறு என்பதெனக் ஒன்னுமில்லடி நான் நூற்றி அம்பதே எடுப்பேன்
எந்தன் அன்பை கொஞ்சம் எடுத்து எடை நிறுத்து அதன் அளவை எழுது
உலகத்தின் மைகள் தீர்ந்துவிடுமே பேப்பர் காலி ஆகுமே செல்லமே
இமைகளில் இருக்கிறாய்
கண்ணிரண்டில் கத்தியுடன் குதிக்கிறாய்
திரைகளை அணைக்கிறாய் கிழிக்கிறாய்
சந்தியா நீ என் இந்தியா
உச்சி முதல் பாதம் வரை உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன் என்னை காதலிக்க சம்மதமா சம்மதமா
பட்டு செல்லும் உன் நிழலை மிக மிக நேசிப்பவன்
என்னை விட யாருமில்லை சொல்லு காதலிக்க சம்மதமா சம்மதமா
இல்லை என்று நீ பொய் சொன்னால் நாளை சம்மதம் கேட்கிறேன்
ஆமாம் என்று உண்மை சொன்னால் இப்பவே மார் அடைப்பில் சாகிறேன்
உச்சி முதல் பாதம் வரை உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன் என்னை காதலிக்க சம்மதமா சம்மதமா
பட்டு செல்லும் உன் நிழலை மிக மிக நேசிப்பவன்
என்னை விட யாருமில்லை சொல்லு காதலிக்க சம்மதமா