யாரோ அழைத்தது போல் என் மனம் திரும்பியதே
ஏனோ விழிகளிலே பௌர்ணமி தழும்பியதே
யாரது அங்கே காதல் தேவன் ஓ
தேடியது யாரோ எனது ஜீவனோ
இதயத்தின் உள்ளே குரல் கேட்டேன்
இன்றைக்கு உந்தன் முகம் பார்த்தேன்
***யாரோ அழைத்தது போல் என் மனம் திரும்பியதே ***
மௌனம் ஒரு காதல் இசை ஒரு காதல் தானா
கேட்கும் ஒளி எல்லாம் அன்பே உந்தன் பெயர் தானா
வானவில் மீதிலே வண்ணங்கள் ஏழும் காதலே
காதலை நீங்கினால் குயில்கள் கூட ஊமையே
பூத்திருந்தேன் என்னை நீ வந்து சூட
பார்த்திருந்தேன் உன்னை கண்களில் மூட
நான் என்பதும் நீ என்பதும் தொலைந்து போக
***யாரோ அழைத்தது போல் என் மனம் திரும்பியதே ***
புல்வெளியில் மலராய் காதலில் விழுந்தேன்
சிந்தும் பணி துளியில் மெல்ல மெல்ல நனைந்தேன்
காதலின் கண்களில் தொலைந்து நானும் போகிறேன்
காதலின் கைகளில் கரைந்து நானும் போகிறேன்
தேடி நின்றேன் என்னை உன்னிடம் தேட
ஓடி வந்தேன் மலை ஆறுகள் போல
நீ என்பதில் நான் என்பது கரைந்து போக
****யாரோ அழைத்தது போல் என் மனம் திரும்பியதே ***