ஆண் : ஓ....ஓ.. ஓ..ஓ..
சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த
பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணை இட இங்கு
வந்தது செந்தமிழ் பாட்டு
சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த
பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணை இட இங்கு
வந்தது செந்தமிழ் பாட்டு
நான் வணங்கும் தெய்வத்தின் விழியில்
நிழல் போல் சோகம் ஆடும்
நடந்த சேதி நான் ஒன்றும் அறியேன்
எதைத்தான் இதயம் பாடும்
சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த
பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணை இட இங்கு
வந்தது செந்தமிழ் பாட்டு
***
ஆண் : அம்மா உன் வார்த்தை வேதம் என்றெண்ணும்
மகனும் நான் தானம்மா
உலவும் என் கோயில் பேசும் என் தெய்வம்
உலகில் நீ தானம்மா
தாயே உன் கண்ணில் துளி நீர் கண்டாலும்
இதயம் தாங்காதம்மா
ஏதோ உன் நெஞ்சில் துயரம் என்றாலும்
விழிகள் தூங்காதம்மா
வண்ண முகம் வாடி நிற்க
பார்த்ததில்லை நானும் எந்நாளும்
வாடை கொஞ்சும் கூந்தலை
ஆடைகொண்டு மூடிட
வருத்தமென்ன இந்நேரம் ம்..ம்..ம்..
சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த
பிள்ளையின் செந்தமிழ் பா..பா..பா..
***
பெண் : காதல் என்னென்று நீயும் காணாமல்
வளர்த்தேன் நான் தானடா
விதியும் கை நீட்ட காதல் தீ மூட்ட
விழுந்தாய் நீ தானடா
ஏழை உன் மோகம் கானல் என் ராகம்
முடிவை கண்டேனடா
மகனே உன் ஆசை முடிக்க நான் இன்று
முடியை தந்தேனடா
காதல் கொண்டு லாபம் என்ன
பார்த்ததுண்டு நானும் அந்நாளில்
அன்னை கண்ட நாடகம் அன்பு மகன் வாழ்விலும்
நடந்திடுமோ இந்நாளில் ல்..ல்..ல்
சொல்ல சொல்ல நீ அறிவாய் இந்த
அன்னையின் செந்தமிழ் பாட்டு (இசை)
பிள்ளைக்கென பாடுகிறாள் உன்னை
பெற்றவள் செந்தமிழ் பாட்டு (இசை)
நீ வணங்கும் தெய்வத்தின் விழியில்
நிழல் போல் சோகம் ஆடும்
நடந்த சேதி நான் இன்னும் சொன்னால்
மகனே மனம் தான் வாடும்
சொல்ல சொல்ல நீ அறிவாய் இந்த
அன்னையின் செந்தமிழ் பாட்டு
பிள்ளைக்கென பாடுகிறாள் உன்னை
பெற்றவள் செந்தமிழ் பாட்டு