Semboove poove

செம்பூவே பூவே
Year
Language

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
ஆடைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ
இமைகளும் உதடுகள் ஆகுமோ
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

அந்திச் சூரியனும் ஊரில் சாய மேகம் வந்து கச்சை ஆக
காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டின் காதல் குற்றாலம்
தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான்
சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா
நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைவளை கீறியதோ

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ
அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சில் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே
மின்னியது தாமரை வண்டு தொடும் நாளிலா
பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலா
முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
நாணத்தாலோராடை சூடிக்கொள்வேன் நானே
பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணை புதையலின் ரகசியமே

சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ
ஆடைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
இமைகளும் உதடுகள் ஆகுமோ
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

sĕmbūve pūve uṉ megam nāṉ vandāl ŏru vaḻiyuṇḍo
sāyndāḍum saṅgil tuḽi paṭṭālum muttāgiḍum muttuṇḍe
āḍaigŏṇḍu naḍakkum maṉmadac cilaiyo
maṉṉavaṉ viralgaḽ pallavaṉ uḽiyo
imaigaḽum udaḍugaḽ āgumo
vĕṭkattiṉ viḍumuṟai āyuḽiṉ varaidāṉo
sĕmbūve pūve uṉ megam nāṉ vandāl ŏru vaḻiyuṇḍo
sāyndāḍum saṅgil tuḽi paṭṭālum muttāgiḍum muttuṇḍe

andic cūriyaṉum ūril sāya megam vandu kaccai āga
kāmaṉ taṅgum mogap pūvil muttak kummāḽam
taṅgat tiṅgaḽ nĕṭrip pŏṭṭum iṭṭu
vĕṇṇilāviṉ kaṉṉam tŏṭṭu
nĕñjilāḍum svāsac cūṭṭiṉ kādal kuṭrālam
teṉtĕḽikkum tĕṇḍralāy niṉṉarugil vandunāṉ
selai nadiyoramāy nīndi viḽaiyāḍavā
nāḽum miṉṉal kŏñjum tāḻambūvaic cŏlli
āsaik keṇikkuḽḽe āḍum mīṉkaḽ tuḽḽi
kaṭṭilum kālvali kŏḽḽādo kaivaḽai kaivaḽai kīṟiyado

sĕmbūve pūve uṉ megam nāṉ vandāl ŏru vaḻiyuṇḍo
sāyndāḍum saṅgil tuḽi paṭṭālum muttāgiḍum muttuṇḍe

indat tāmaraippū tīyil iṇḍru kāttirukku uḽḽam nŏndu
kaṇgaḽ ĕṉṉum pūndeṉ tumbi pāḍic cĕllādo
andak kāmaṉ ambu ĕṉṉaic cuṭṭu pāvai nĕñjil nāṇam suṭṭu
megalaiyiṉ nūlaṟukkum selaip pŏṉ pūve
miṉṉiyadu tāmarai vaṇḍu tŏḍum nāḽilā
pāvai mayil sāyude maṉṉavaṉiṉ mārbilā
muttattāle pĕṇṇe selai nĕyveṉ kaṇṇe
nāṇattālorāḍai sūḍikkŏḽveṉ nāṉe
pāyāgum maḍi sŏllāde pañjaṇai pudaiyaliṉ ragasiyame