சோனியா...
சோனியா... சோனியா சோனியா
சோனியா........
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
ஹே.. சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று.
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று
பாமா... பாமா...
ரிக ரிக ரிமக ரிக
பாமா...
ரிக ரிக ரிமக ரிக
பூவோடு உரசும் பூங்காற்றை போலே
சீரோடு அணைத்தால் அது சைவம்
வேரோடு வளைக்கும் புயல் காற்றை போலே
மார்போடு இழுத்தால் அது அசைவம்
புல்லில் வந்து விழும் தூறலை போல்
ஒரு பெண்ணின் மீது கை தீண்டுவது சைவம்
கரையை மீறுகின்ற வெள்ளத்தை போல்
ஒரு பெண்ணை சேர்ந்து எல்லை தாண்டுவது அசைவம்
பெண் கூந்தல் மீது பூவாகட்டா?
பூ கூந்தல் கலைத்து விளையாடட்டா?
மெலிதான முத்தத்தில் சக்தியில்லை
மெத்தை மேல் சைவத்தில் அர்த்தமில்லை
பேரின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
உள் நெஞ்சு துடிக்கும் உள்ளுக்குள் வெடிக்கும்
பூ போலே அணைக்க பொறுமை இல்லை
பெண் ஒன்று புதுமை கண்ணாடி பதுமை
கையால தெரிந்தால் கவலை இல்லை
காதல் Cricket-இல் சட்டம் இல்லை
[சாஸ்திரம் இல்லை
Runs எடுப்பதுதான் வேலை
பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை
கண் தூங்குவதில்லை
பெண் மல்லிகை பூ மாலை
தட்டாமல் போனால் தங்கமில்லை
முட்டாமல் போனால் மோகமில்லை
காமத்தின் வாதத்தில் நியாயமில்லை
கன்னத்தின் காயங்கள் காதலில்லை
பெண் தேவை எதுவென்று அறிகின்ற ஆணில்லை
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று
சோனியா... சோனியா சோனியா