Puttam pudu

புத்தம் புது
Work
Year
Language

ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

வாய் பேசும் வார்த்தையெல்லாம்
கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையைத்தான்
கண்ணீரும் சொன்னதோ

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

(இசை) சரணம் - 1

ஆண் : பால் நிலா தேய்கின்றதென்று
பகலிரவும் என் நெஞ்சம்
வழி விடுமோ என்றஞ்சும்

பெண் : ஆதவன் நீ தந்ததன்றோ
நிலவு மகள் என் வண்ணம்
நினைவுகளில் உன் எண்ணம்

ஆண் : கருணைக் கொண்டு நீ தான்
காயம் தன்னை ஆற்ற

பெண் : பார்வைக் கொண்டு நீ தான்
பாச தீபம் ஏற்ற

ஆண் : உயிரென நான் கலந்தேன்

பெண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

(இசை) சரணம் - 2

பெண் : வாழ்வெனும் கோலங்கள் இன்று
வரைந்தது உன் தொண்டுள்ளம்
நெகிழ்ந்தது என் பெண் உள்ளம்

ஆண் : ஈத்திசை பூபாளம் என்று
எழுந்தது பார் நம் தானம்
விடிந்தது நம் செவ்வானம்

பெண் : கூந்தல் மீது பூவாய்
நானும் உன்னை சூட

ஆண் : தோகை உன்னை நான்தான்
தோளில் இன்று வாங்க

பெண் : உனக்கென நான் பிறந்தேன்

ஆண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

பெண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

ஆண் : வாய் பேசும் வார்த்தையெல்லாம்
கண் பேசும் அல்லவோ

பெண் : கண் பேசும் வார்த்தையைத்தான்
கண்ணீரும் சொன்னதோ
புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

ஆண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

āṇ : ā ā ā ā ā ā
ā ā ā ā ā ā
puttam pudu pū pūttado
ĕṇṇaṅgaḽil teṉ vārttado
mŏṭṭaviḻa nāḽ āṉado
sŏllaḍi ĕṉ sĕllakkiḽiye

puttam pudu pū pūttado
ĕṇṇaṅgaḽil teṉ vārttado
mŏṭṭaviḻa nāḽ āṉado
sŏllaḍi ĕṉ sĕllakkiḽiye

vāy pesum vārttaiyĕllām
kaṇ pesum allavo
kaṇ pesum vārttaiyaittāṉ
kaṇṇīrum sŏṉṉado

puttam pudu pū pūttado
ĕṇṇaṅgaḽil teṉ vārttado
mŏṭṭaviḻa nāḽ āṉado
sŏllaḍi ĕṉ sĕllakkiḽiye

(isai) saraṇam - 1

āṇ : pāl nilā teygiṇḍradĕṇḍru
pagaliravum ĕṉ nĕñjam
vaḻi viḍumo ĕṇḍrañjum

pĕṇ : ādavaṉ nī tandadaṇḍro
nilavu magaḽ ĕṉ vaṇṇam
niṉaivugaḽil uṉ ĕṇṇam

āṇ : karuṇaik kŏṇḍu nī tāṉ
kāyam taṉṉai āṭra

pĕṇ : pārvaik kŏṇḍu nī tāṉ
pāsa tībam eṭra

āṇ : uyirĕṉa nāṉ kalandeṉ

pĕṇ : puttam pudu pū pūttado
ĕṇṇaṅgaḽil teṉ vārttado
mŏṭṭaviḻa nāḽ āṉado
sŏllaḍi ĕṉ sĕllakkiḽiye

(isai) saraṇam - 2

pĕṇ : vāḻvĕṉum kolaṅgaḽ iṇḍru
varaindadu uṉ tŏṇḍuḽḽam
nĕgiḻndadu ĕṉ pĕṇ uḽḽam

āṇ : īttisai pūbāḽam ĕṇḍru
ĕḻundadu pār nam tāṉam
viḍindadu nam sĕvvāṉam

pĕṇ : kūndal mīdu pūvāy
nāṉum uṉṉai sūḍa

āṇ : togai uṉṉai nāṉtāṉ
toḽil iṇḍru vāṅga

pĕṇ : uṉakkĕṉa nāṉ piṟandeṉ

āṇ : puttam pudu pū pūttado
ĕṇṇaṅgaḽil teṉ vārttado
mŏṭṭaviḻa nāḽ āṉado
sŏllaḍi ĕṉ sĕllakkiḽiye

pĕṇ : puttam pudu pū pūttado
ĕṇṇaṅgaḽil teṉ vārttado
mŏṭṭaviḻa nāḽ āṉado
sŏllaḍi ĕṉ sĕllakkiḽiye

āṇ : vāy pesum vārttaiyĕllām
kaṇ pesum allavo

pĕṇ : kaṇ pesum vārttaiyaittāṉ
kaṇṇīrum sŏṉṉado
puttam pudu pū pūttado
ĕṇṇaṅgaḽil teṉ vārttado
mŏṭṭaviḻa nāḽ āṉado
sŏllaḍi ĕṉ sĕllakkiḽiye

āṇ : puttam pudu pū pūttado
ĕṇṇaṅgaḽil teṉ vārttado
mŏṭṭaviḻa nāḽ āṉado
sŏllaḍi ĕṉ sĕllakkiḽiye