ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா
தாய் போல நானே தாலாட்டுவேனே சோஜா சோஜா சோஜா
ஓ ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பவன் நான் தானே
ஓ ப்ரியா இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீ தானே
கண்ணீர் ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா
அதோ அதோ ஓர் பூங்குயில்
இதோ இதோ உன் வார்த்தையில்
அதோ அதோ ஓர் பொன்மயில்
இதோ இதோ உன் ஜாடையில்
யார் இந்த குயிலை அழ வைத்தது
மலர்மீது தானா சுமை வைப்பது
பூக்கள் கூடி போட்டதிங்கு தீர்மானமே
உந்தன் சிரிப்பை கேட்ட பின்பு அவை பூக்குமே
ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா
நிலா நிலா என் கூடவா
சலாம் சலாம் நான் போடவா
சதா சதா உன் ஞாபகம்
சுகம் சுகம் என் நெஞ்சிலே
நிலவே நிலவே வெயில் கொண்டுவா
மழையே மழையே குடை கொண்டுவா
அன்னை தந்தையாக உன்னைக் காப்பேனம்மா
அன்பு தந்து உன்னில் என்னைப் பார்ப்பேனம்மா
ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா
தாய் போல நானே தாலாட்டுவேனே சோஜா சோஜா சோஜா
ஓ ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பது நான் தானே
ஓ ப்ரியா இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீ தானே
கண்ணீர் ஏன் ஏன் ஏன் என் உயிரே