Povomaa oorgolam

போவோமா ஊர்கோலம்
Year
Language

பெண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...
ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்

பெண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...

***

ஆண் : அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா

பெண் : பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா

ஆண் : குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா

பெண் : சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா

ஆண் : பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு

பெண் : வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு

ஆண் : அதிசயமான பெண்தானே

பெண் : புதுசுகம் தேடி வந்தேனே

ஆண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...
ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்

ஆண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...

***

பெண் : கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்

ஆண் : கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்

பெண் : ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே

ஆண் : உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே

பெண் : கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும்

ஆண் : அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்

பெண் : போதும் போதும் உம் பாட்டு

ஆண் : பொறப்படப் போறேன் நிப்பாட்டு

பெண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...

ஆண் : ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்

பெண் : காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்

ஆண் : போவோமா ஊர்கோலம் ....

பெண் : பூலோகம் எங்கெங்கும்...

pĕṇ : povomā ūrgolam ....
pūlogam ĕṅgĕṅgum...
oḍum pŏṉṉi āṟum...pāḍum kāṉam nūṟum
kālam yāvum periṉbam...kāṇum neram āṉandam

pĕṇ : povomā ūrgolam ....
pūlogam ĕṅgĕṅgum...

***

āṇ : araṇmaṉai aṉṉakkiḽi taraiyila naḍappadu naḍakkumā aḍukkumā

pĕṇ : paṉiyilum vĕṭṭavĕḽi vĕyyililum uḽḽa sugam araṇmaṉai kŏḍukkumā

āṇ : kuḽuguḽu aṟaiyila kŏñjik kŏñji tavaḻndadu kuḍisaiya virumbumā

pĕṇ : silusilusiluvĕṉa iṅgirukkum kāttu aṅga aḍikkumā kiḍaikkumā

āṇ : paḽiṅgu pola uṉ vīḍu vaḻiyila paḽḽam meḍu

pĕṇ : varappu meḍum vayaloḍum paṟandu poveṉ pāru

āṇ : adisayamāṉa pĕṇdāṉe

pĕṇ : pudusugam teḍi vandeṉe

āṇ : povomā ūrgolam ....
pūlogam ĕṅgĕṅgum...
oḍum pŏṉṉi āṟum...pāḍum kāṉam nūṟum
kālam yāvum periṉbam...kāṇum neram āṉandam

āṇ : povomā ūrgolam ....
pūlogam ĕṅgĕṅgum...

***

pĕṇ : kŏṭṭugiṟa aruviyum mĕṭṭukkaṭṭum kuruviyum aḍaṭaḍā adisayam

āṇ : kaṟpaṉaiyil midakkudu kaṇḍadaiyum rasikkudu idilĕṉṉa ŏru sugam

pĕṇ : rattiṉaṅgaḽ tĕṟikkudu muttumaṇi jŏlikkudu naḍandiḍum nadiyile

āṇ : uccandala sŏḻaludu uḽḽukkuḽḽa mayaṅgudu ĕṉakkŏṇṇum puriyalle

pĕṇ : kavidai pāḍum kāveri jadiya serttu āḍum

āṇ : aṇaigaḽ nūṟu poṭṭālum aḍaṅgiḍāma oḍum

pĕṇ : podum podum um pāṭṭu

āṇ : pŏṟappaḍap poṟeṉ nippāṭṭu

pĕṇ : povomā ūrgolam ....
pūlogam ĕṅgĕṅgum...

āṇ : oḍum pŏṉṉi āṟum...pāḍum kāṉam nūṟum

pĕṇ : kālam yāvum periṉbam...kāṇum neram āṉandam

āṇ : povomā ūrgolam ....

pĕṇ : pūlogam ĕṅgĕṅgum...