Poovukkul olindirukkum

பூவுக்குள் ஒளிந்திருக்கும்
Work
Year
Language

(ஆண்)
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் - (பெண்)
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்

அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் - (ஆண்)

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்போல் பூவாசம் அதிசயமே - (பெண்)
அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே

மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே - (ஆண்)
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே - (பெண்)
உண்டான காதல் அதிசயம் ஓஹோ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ஓஹோ..

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் - (ஆண்)

வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் - (பெண்)

துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் - (ஆண்)

குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் - (பெண்)

அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் - (ஆண்)

பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே - (ஆண்)
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம், ஓஹோ.. - (பெண்)

பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் - (பெண்)
படர்கின்ற காதல் அதிசயம்
(ஆண்)
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம், அதிசயம் - (பெண்)
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள், அதிசயம் - (பெண்)
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல், அதிசயம் - (பெண்)
குருநாதர் இல்லாத குயில் பாட்டு, அதிசயம் - (பெண்)
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் - (ஆண்)
 

(āṇ)
pūvukkuḽ ŏḽindirukkum kaṉikkūṭṭam adisayam
vaṇṇattup pūcci uḍambil oviyaṅgaḽ adisayam
tuḽaisĕllum kāṭru mĕllisaiyādal adisayam
kurunādar illāda kuyil pāṭṭu adisayam
adisayame asandubogum nīyĕndaṉ adisayam
kaldoṇḍri maṇdoṇḍrik kaḍaldoṇḍrum muṉṉāle
uṇḍāṉa kādal adisayam
padiṉāṟu vayadāṉa paruvattil ĕllorkkum
paḍargiṇḍra kādal adisayam

pūvukkuḽ ŏḽindirukkum kaṉikkūṭṭam adisayam - (pĕṇ)
vaṇṇattup pūcci uḍambil oviyaṅgaḽ adisayam
tuḽaisĕllum kāṭru mĕllisaiyādal adisayam
kurunādar illāda kuyil pāṭṭu adisayam

adisayame asandubogum nīyĕndaṉ adisayam - (āṇ)

ŏru vāsamillāk kiḽaiyiṉ mel naṟuvāsamuḽḽa pūvaippol pūvāsam adisayame - (pĕṇ)
alaikkaḍal tanda megattil tuḽikkūḍa uppillai maḻai nīrum adisayame

miṉcāram illāmal midakkiṇḍra tībambol meṉi kŏṇḍa miṉmiṉigaḽ adisayame - (āṇ)
uḍalukkuḽ ĕṅge uyiruḽḽadĕṉbadum uyirukkuḽ kādal ĕṅguḽḽadĕṉbadum
niṉaittāl niṉaittāl adisayame

kaldoṇḍri maṇdoṇḍrik kaḍaldoṇḍrum muṉṉāle - (pĕṇ)
uṇḍāṉa kādal adisayam oho
padiṉāṟu vayadāṉa paruvattil ĕllorkkum
paḍargiṇḍra kādal adisayam oho..

pūvukkuḽ ŏḽindirukkum kaṉikkūṭṭam adisayam - (āṇ)

vaṇṇattup pūcci uḍambil oviyaṅgaḽ adisayam - (pĕṇ)

tuḽaisĕllum kāṭru mĕllisaiyādal adisayam - (āṇ)

kurunādar illāda kuyil pāṭṭu adisayam - (pĕṇ)

adisayame asandubogum nīyĕndaṉ adisayam - (āṇ)

pĕṇbāl kŏṇḍa siṟudīvu kālgŏṇḍu naḍamāḍum nīdāṉ ĕṉ adisayame - (āṇ)
ulagil eḻalla adisayaṅgaḽ vāybesum nīdāṉ ĕṭṭāvadadisayame
vāṉ midakkum uṉ kaṇgaḽ teṉ tĕṟikkum kaṉṉaṅgaḽ pāl kuḍikkum adaraṅgaḽ adisayame
naṅgaigŏṇḍa viralgaḽ adisayame nagam ĕṇḍra kirīḍamum adisayame
asaiyum vaḽaivugaḽ adisayame
kaldoṇḍri maṇdoṇḍrik kaḍaldoṇḍrum muṉṉāle
uṇḍāṉa kādal adisayam, oho.. - (pĕṇ)

padiṉāṟu vayadāṉa paruvattil ĕllorkkum - (pĕṇ)
paḍargiṇḍra kādal adisayam
(āṇ)
pūvukkuḽ ŏḽindirukkum kaṉikkūṭṭam, adisayam - (pĕṇ)
vaṇṇattup pūcci uḍambil oviyaṅgaḽ, adisayam - (pĕṇ)
tuḽaisĕllum kāṭru mĕllisaiyādal, adisayam - (pĕṇ)
kurunādar illāda kuyil pāṭṭu, adisayam - (pĕṇ)
adisayame asandubogum nīyĕndaṉ adisayam - (āṇ)