Poongaatre konyajam

பூங்காற்றே கொஞ்சம்
Work
Year
Language

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா
மேகங்கள் கலையலாம் வானமே கலையுமா
உள்ளங்கள் கலங்கலாம் உண்மையே கலங்குமா
ஆறுதல் கூறாயோ அறிவுதான் எங்கே

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா

அலைகளாய் ஆடுதே அன்பு மணம் உள்ளங்களே
கனவிலே உருகுதே மெழுகு ஓர் சொந்தங்களே
பாடிடும் குயில் தோப்பில் யார் அம்பு எய்தார்
வீணையை விறகாக யார் இங்கு காண்பார்
காலமே உன் வீணையாய் இனி மாறுமோ

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா

பறவைகள் கூடிடும் வசந்தமாய் ஓர் காலம்
பருவங்கள் மாறினால் திரும்பிடும் ஓர் காலம்
மாலையில் பூத்தாடும் மல்லிகையின் கூட்டம்
மாலையை சேராமல் என்ன இந்த மாற்றம்
ஓவியம் உருவாகுமோ சுகமன்றியே

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா
மேகங்கள் கலையலாம் வானமே கலையுமா
உள்ளங்கள் கலங்கலாம் உண்மையே கலங்குமா
ஆறுதல் கூறாயோ அறிவுதான் எங்கே
பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா

pūṅgāṭre kŏñjam uṇmai sŏlla varuvāyā
porāḍum niyāyam sāṭci sŏlli povāyā
megaṅgaḽ kalaiyalām vāṉame kalaiyumā
uḽḽaṅgaḽ kalaṅgalām uṇmaiye kalaṅgumā
āṟudal kūṟāyo aṟivudāṉ ĕṅge

pūṅgāṭre kŏñjam uṇmai sŏlla varuvāyā
porāḍum niyāyam sāṭci sŏlli povāyā

alaigaḽāy āḍude aṉbu maṇam uḽḽaṅgaḽe
kaṉavile urugude mĕḻugu or sŏndaṅgaḽe
pāḍiḍum kuyil toppil yār ambu ĕydār
vīṇaiyai viṟagāga yār iṅgu kāṇbār
kālame uṉ vīṇaiyāy iṉi māṟumo

pūṅgāṭre kŏñjam uṇmai sŏlla varuvāyā
porāḍum niyāyam sāṭci sŏlli povāyā

paṟavaigaḽ kūḍiḍum vasandamāy or kālam
paruvaṅgaḽ māṟiṉāl tirumbiḍum or kālam
mālaiyil pūttāḍum malligaiyiṉ kūṭṭam
mālaiyai serāmal ĕṉṉa inda māṭram
oviyam uruvāgumo sugamaṇḍriye

pūṅgāṭre kŏñjam uṇmai sŏlla varuvāyā
porāḍum niyāyam sāṭci sŏlli povāyā
megaṅgaḽ kalaiyalām vāṉame kalaiyumā
uḽḽaṅgaḽ kalaṅgalām uṇmaiye kalaṅgumā
āṟudal kūṟāyo aṟivudāṉ ĕṅge
pūṅgāṭre kŏñjam uṇmai sŏlla varuvāyā
porāḍum niyāyam sāṭci sŏlli povāyā