மதுர மதுர தான்
கோயம்புதூர் கோயம்புதூர் தான்
இது என்னது மதுரக் காரரு
இம்புட்டு சவுண்டு
முடிச்ச ஒன்ன இதுக்கா இம்புட்டு எகிறு
ஈச்சம்பழம் நாவப் பலம் என்ற
மாமா ஊன்ற கருப்பு
எங்க ஊரு காக்காயின அட
உங்கள காட்டிலும் செவப்பு
வாடிப் பட்டி ஆடு வெட்டி
தெனம் வேக வச்ச கரிச் சட்டி நீ
அட கண்ணக் கருப்பானாலும்
என்ற ஊட்டு கண்ணுக் குட்டி
கோயம்புதூர் மாலுக் குட்டி
என்ன பேசாத மட்டம் தட்டி
மல்கோவா மாம்பளமே உண்ணத்
திங்கப் போறேன் வெட்டி
மீசை இல்லா மதுர வீரன்
இப்பன் நான்தான் தெரிஞ்சுக்கடி
செல்லக் குட்டி மெல்லக் கட்டி
நாங் கத்திய தான் எடுத்தா
நிக்க மாட்டேன் ஓரம் காட்டி
கோயம்புதூர் மாலுக் குட்டி
என்ன பேசாதா மட்டம் தட்டி
ஈச்சம்பழம் நாவப் பழம் என்ற
மாமா ஊன்ற கருப்பு
கொண்ட முடியும் கருப்பு
ஒன் கண்ணு மையும் கருப்பு
ஹே இடுப்பு மச்சம் கருப்பு
அடி என்மேல மட்டும் ஏண்வெறுப்பு
கொண்ட முடியும் கருப்பு
ஒன் கண்ணு மையும் கருப்பு
ஹே இடுப்பு மாசம் கருப்பு
அடி என்மேல மட்டும் ஏண்வெறுப்பு
ஹே மண்னோடத்தான் மறஞ்சிருக்கும்
கரிதான் வைரக் கல்லா ஆகும்
அட ரெம்ப நீ வழியிற
போதையில அலையுற
சிக்காது வலையில
மருத மல பச்சக் கிளி
ஈச்சம்பழம் நாவப் பலம் என்ற
மாமா ஊன்ற கருப்பு
எங்க ஊரு காக்காயின அட
உங்கள காட்டிலும் செவப்பு
வாடிப் பட்டி ஆடு வெட்டி
தெனம் வேக வச கரிச் சட்டி நீ
அட கண்ணக் கருப்பானாலும்
என்ற ஊட்டு கண்ணுக் குட்டி
கோயம்புதூர் மாலுக் குட்டி
என்ன பேசாத மட்டம் தட்டி
மல்கோவா மாம்பளமே உன்னத்
திங்கப் போறேன் வெட்டி
மாமா நேரம் தான் இரும்பு
ஊன்ற மனசோ சக்கரக் கரும்பு
ஹே நீங்கோ ஊட்டி விட்டா
இனிக்கும் வேப்பம் கொழுந்து
நாம அன்போடு தான் சேர்ந்திருந்தா
வம்பேது தூம்பேது மாமா
அடி சிறுவாணி தண்ணிக்குள்ள
நீந்தி வந்த சின்னப்புள்ள
உன்னத் தொட்ட கையினால
நான் தொட மாட்டேன் பிராந்திப் புட்டி
கோயம்புதூர் மாலுக் குட்டி
என்ன பேசாதா மட்டம் தட்டி
மல்கோவா மாம்பளமே உன்னத்
திங்கப் போறேன் வெட்டி
வாடிப் பட்டி ஆடு வெட்டி
தெனம் வேக வச கரிச் சட்டி நீ
கள்ளி பட்டி கருப்பட்டி
அட கண்ணக் கருப்பானாலும்
என்ற ஊட்டு கண்ணுக் குட்டி நீ