தலை வாழை இலை போட்டு
விருந்து வைப்பேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவமிருப்பேன்
தலை வாழை இலை போட்டு
விருந்து வைப்பேன்
என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்
நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன்
நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன்
உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்
உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்
தலை வாழை இலை போட்டு
விருந்து வைப்பேன்
என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்
மனையறம் தனை காக்க நானிருக்க
என் துணைக் கரம் என என்றும் நீயிருக்க
மனையறம் தனை காக்க நானிருக்க
என் துணைக் கரம் என என்றும் நீயிருக்க
இல்லறம் நலமாக துலங்காதோ
இல்லறம் நலமாக துலங்காதோ
புவி இன்பமெல்லாம் இங்கு விளங்காதோ
தலை வாழை இலை போட்டு
விருந்து வைப்பேன்
என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்
கதிரவன் முகம் பார்க்கும் தாமரையும்
தன் காதலை எதிர் பார்க்கும் பெண் மனமும்
கதிரவன் முகம் பார்க்கும் தாமரையும்
தன் காதலை எதிர் பார்க்கும் பெண்மனமும்
ஓரினம் என்பது தான் புரியாதோ
ஓரினம் என்பது தான் புரியாதோ
என் ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ
என் ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ
ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ
தலை வாழை இலை போட்டு
விருந்து வைப்பேன்
என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்
கொடியினில் பிறந்தது மலரொன்று
அதன் குளிர் விழி மலர்ந்தது நிலவென்று
மடியினில் தவழ்ந்தது உனைக் கண்டு
தன் இதழ்களில் உனக்கென தேன் கொண்டு
ஆ... ஆ... ஆ... ஆ...
மஞ்சள் கொஞ்சிடும் மாங்கல்யம்
அது மங்கையர்க் கெல்லாம் பெரும் செல்வம்
மஞ்சள் கொஞ்சிடும் மாங்கல்யம்
அது மங்கையர்க் கெல்லாம் பெரும் செல்வம்
கண்ணுக்கு நிறைந்த கணவனைத் தவிர
கண்ணுக்கு நிறைந்த கணவனைத் தவிர
பெண்ணுக்கு ஏது ஒரு தெய்வம்
பெண்ணுக்கு ஏது ஒரு தெய்வம்