அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
வானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசை என்ன பூங்காற்றில் ஒரு ராகம் பொன் வண்டின் ரீங்காரம்
பாடும் பாடல் என்ன சித்தாடை முத்தாடு செவ்வந்தி நீயே
சிங்காரம் பார்வை சொல்லும் சேதியல்லவோ
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே அடி பெண்ணே
நீரோடும் ஒரு ஓடை மேலாடும் திருமேடை தேடும் தேவையென்ன
பார்த்தாளும் ஒரு ராணி பாலாடை இவள் மேனி கூறும் ஜாடை என்ன
ஒன்றோடு ஒன்றான எண்ணங்கள் நீயே கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ