வேலை வெட்டி ஏதும் இல்ல
சோறு திங்க காசு இல்ல
இலட்சியங்கள் தூளா போச்சு சொதப்பல்
ஊருக்குள்ள பேரும் இல்ல
பட்டம் வாங்கி பலனும் இல்ல
திட்டம் எல்லாம் நட்டம் ஆச்சு சொதப்பல்
பூமி மேல வந்தாச்சு
பாரமுன்னு ஆயாச்சு
பந்த பாசம் தூள் ஆச்சு சொதப்பல்
கண்ட கனவு காணளாச்சு
கல்வி பக்தி பொய்த்து போச்சு
காதல் கல்வி வெறுத்து போச்சு சொதப்பல்
தேசம் முழுதும் ஊழல் ஆச்சு
அறிவு திறமை வெறுமை ஆச்சு
அன்பும் பண்பும் பழமை ஆச்சு சொதப்பல்
college-um சொதப்பல்
நேர் கானல் சொதப்பல்
எல்லாமே சொதப்பல் சொதப்பல்
பொறந்து வளர்ந்து பொதஞ்சு போச்சு
கஷ்டப்பட்டு என்ன ஆச்சு
விட்டு தள்ளு வெட்டி பேச்சு சொதப்பல்
வேலை வெட்டி ஏதும் இல்ல
சோறு திங்க காசு இல்ல
இலட்சியங்கள் தூளா போச்சு சொதப்பல்