போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா
தாய் வீடென்பதும் தன் வீடே
தந்தையின் நாடும் நம் நாடே
சேயும் சேயும் வரக் கண்டால்
திறவாக் கதவும் திறவாதோ
போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா
ஒரு நாள் கோபம் ஒரு நாளே
அதில் உத்தமர் கோபம் வளராதே
மண நாள் மன்னன் உனைக் கண்டு
மதி மயங்குகிறானே தளராதே
போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா
காதலன் சேனை நின்றிருக்கும் தந்தை
கண்களும் உன்னை கண்டிருக்கும்
பாவலர் தோழியர் இசைக் கேட்கும்
அன்பு பார்வையெல்லாம் உன்னை வரவேற்கும்
போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா