நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம்
நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம்
இன்ப ராகங்கள் என்னை மயக்குது அந்த ஆசைகள் கொஞ்சம் புரியுது
நானும் நீயும் ஜோடி ஆனால் ஆனந்தம் தான் கோடி
போதை தீராது சிலிர்க்குது சிலிர்க்குது ரசிக்குது
பார்த்தா ஏன் என்ன பார்வையோ அம்மம்மா
நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம்
அந்த கோவிலின் மணிகள் ஒலிக்குது அர்த்த ஜாமத்தில் பூஜைகள் நடக்குது
சந்தன மேடை குங்கும வாடை பொங்குது பாலோடை
தேனில் அபிஷேகம் நடக்குது மனக்குது
மயக்குது மோகமோ என்ன தேகமோ அம்மம்மா நினைத்தால் இனிக்கும்
கொஞ்சம் கனவுகள் நெஞ்சில் நிறைந்தது அந்த உறவுகள் கண்ணில் தெரியுது
வந்தது வசந்தம் பூவின் வாசம்
தென்றல் காற்றோடு தென்னங்கீற்றோடு குளிர்ந்து குளிர்ந்து
நடுங்குது மோகமோ என்ன யோகமோ அம்மம்மா
நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம்
அம்மம்மா இது சுகமோ சுகம் அம்மம்மா இது சுகமோ சுகம்