அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம் ! ((அம்மா))
அன்னையை(ப்) பிள்ளை
பிள்ளையை அன்னை
அம்மா என்றாய் அழைப்பதுண்டு
அன்பின் விளக்கம்
பண்பின் முழக்கம்
அம்மா என்றொரு சொல்லில் உண்டு ! (அம்மா)
பத்து திங்கள் மடி சுமப்பாள் !
பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள்
பத்திய மிருந்து காப்பாள்
தன் ரத்தத்தை பாலாக்கி கொடுப்பாள் !! (அம்மா)
இயற்கை கொடுக்கும் செல்வத்தை எல்லாம்
பொதுவாய் வைத்திட வேண்டும்
இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும்
பகிர்ந்தே கொடுத்திட வேண்டும் !
ஒருவருக்காக மழை இல்லை
ஒருவருக்காக நிலவில்லை
வருவதெல்லாம் அனைவருக்கும்
வகுத்தே வைத்தால் வழக்கில்லை !! (அம்மா)
மொழியும் நாடும்
முகத்துக்கு இரண்டு விழிகள் ஆகும்
என்று உணரும்போது
உனக்கும் எனக்கும் நன்மை என்றும் உண்டு
வாழும் உயிரில்
உயர்வும் தாழ்வும்
வகுத்து வைப்பது பாவம் !
கருணை கொண்ட மனிதரெல்லாம்
கடவுள் வடிவம் ஆகும் !! (அம்மா)