ஓடும் ரயிலை போல இதயம் மொத்தமாய் ஆடியே போவதென்ன
மூடு பனியாய் காலை வெயில் போல் வந்து நான் உன்னையும் சேர்வதென்ன
உன் அழகினை அறிவதும் என்ன
என் அடிமனம் கரைவதும் என்ன
உனது செயல் பார்த்தே அசந்தேனே
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே
ஓடும் ரயிலை போல இதயம் மொத்தமாய் ஆடியே போவதென்ன
மூடு பனியாய் காலை வெயில் போல் வந்து நான் உன்னையும் சேர்வதென்ன
தேனி உன்னை ஈசல் என்று எண்ணி கொண்டு நானிருந்தேன்
தேவதை நீ என்ற உண்மை சற்று முன்பு தான் அறிந்தேன்
குட்டை ஒன்று உன்னாலே கங்கை ஆனதே
என்னை மன்னிப்பாயா இல்லை தண்டிப்பாயா
கொஞ்சம் தவறாக உன்னை நினைத்தேனே
திரு நீரை சாம்பல் பறித்தேனே
ஓடும் ரயிலை போல இதயம் மொத்தமாய் ஆடியே போவதென்ன
மூடு பனியாய் காலை வெயில் போல் வந்து நான் உன்னையும் சேர்வதென்ன
கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஏனோ என்னை காணவில்லை
கை பிடித்து கூட்டி சென்று வானவில்லை
ஒற்றை பார்வையாலே எல்லாம் மாறுதே
மக்கு பயலானேன் முக்தி அடைந்தேனே
தருதலை தானே தலை நிமிர்ந்தேனே
விலைவாசி போல உயர்ந்தேனே