மனிதா மனிதா இதுதான் நீதியோ
காதல் புரிந்தால் கண்ணீர் கூலியோ
சிறகு விழுந்தால் புதிதாய் முளைக்கும்
வான் வீழ்வதோ ஹோ ஓ..
மனிதா மனிதா இதுதான் நீதியோ
காதல் புரிந்தால் கண்ணீர் கூலியோ
பயனிகள் நடப்பார் நிழலில் நிழலில்
நிழல் தரும் மரமோ வெயிலில் வெயிலில்
கடந்தவர் இருப்பார் கரையில் கரையில்
கடத்திய படகோ அலையில் அலையில்
உன் மேல் பிழை இல்லை இதில் வருத்தம் உதவாது
தெய்வம் பிழை செய்தால் அதில் திருத்தம் கிடையாது
விதி வெல்லவா ஹோ ஓ..
உயரத்தை குறைத்தால் இமயம் ஏது
துயரத்தை கழித்தால் வாழ்க்கை ஏது
மழை துளி எல்லாம் முத்துக்கள் ஆனால்
மனிதர்கள் பருக குடிநீர் ஏது
மனிதன் கொள்ளும் சோகம் அது வாழ்கையின் பாகம்
எரித்தா துன்பம் போகும் கொஞ்சம் சிரித்தால் அது போகும்
சிரித்தால் என்ன ஹோ ஓ..
மனிதா மனிதா இதுதான் நீதியோ
காதல் புரிந்தால் கண்ணீர் கூலியோ
சிறகு விழுந்தால் புதிதாய் முளைக்கும்
வான் வீழ்வதோ ஹோ ஓ..
மனிதா மனிதா இதுதான் நீதியோ
காதல் புரிந்தால் கண்ணீர் கூலியோ