கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா (2)
அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன் (2)
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை (2)
இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன் (2)
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா (2)
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆ
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும் (2)
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா
வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய் (2)
கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கணவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா