ஹேய் பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
வெட்கப்பட்டு சிரிக்குது
கடா மீசை கடா மீசை
எட்டி கட்டி பிடிக்குது
பொத்திவச்ச ஆசை எல்லாம்
பத்திக்கிட்டு எரியுது
காதல் என்னும் புயல் இப்போ
கூரை பிய்க்க அடிக்குது
மூச்சு நிக்குது பேச்சு திக்குது
மனசு சொக்குது உன்னாலே
ஆசை பின்னுது உசிர தின்னுது
ஏதோ பன்னுது உன்னாலே
புதுசாக என்ன ஆரம்பிச்ச
நம்ம வாழ நெஞ்ச ஊறவச்ச
அழகாலே என்ன ஆற வச்ச
ஹைய்யோ...ஹைய்யோ...ஹைய்யோ...
விரல் நீட்டி என்ன வேக வச்ச
சுகமாக என்ன சாக வச்ச
என்ன தாண்டி என்ன நோக வச்ச
ஹைய்யோ...ஹைய்யோ... ஹைய்யோ...
தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பாத்ததும் நெஞ்சிலே பூக்களாச்சு
தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு
மூச்சு நிக்குது பேச்சு திக்குது
மனசு சொக்குது உன்னாலே
சரணம் - 1
நீ வாடகைக்கு வீடு தேடும்
சேதி தான் ஊருக்குள்ளே கேட்டேன்
அடி கேட்டேன்
நான் பூ வளர்க்கும் பொட்டை ஒன்று
நீ வசிக்க தாலி செய்து வைத்தேன்
அடி வைத்தேன்
நீரில் வந்தாய் சாரல் தந்தாய்
நேரில் வந்தாய் மாற்றுகின்றாய்
ஓய்வில்லாமே துள்ளினேனே
பூவின் எடை காற்றின் எடை
சேர்த்த விடை உந்தன் எடை
ஒன்னு கொடு மூக்கு மேலே விரலு வைக்குமே
தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்னப் பாத்ததும் நெஞ்சிலே பூக்களாச்சு
தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு
சரணம் - 2
உந்தன் கையெழுத்து போட்டு வைத்த
காகிதத்தில் வானவில்லைப் பார்த்தேன்
நான் பூத்தேன்
உந்தன் கால்கள் வந்த பாதை எங்கும்
மண்ணெடுத்து பூக்களாகப் போட்டேன்
உயிர் சேர்த்தேன்
காதல் ஒரு காதல் ஒரு
போதை நதி போதை நதி
முழ்க கூட தேவையில்லை
பார்க்கும் போது உன்னைச் சாய்ப்போம்
காதல் ஒரு காதல் ஒரு
நீண்ட சதி நீண்ட சதி
சோகம் தரும் இன்பம் தரும்
நீரும் தீயும் பாதி பாதி சேர்ந்து பாக்குமே
தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்னப் பாத்ததும் நெஞ்சிலே பூக்காளாச்சு
தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு