ஆ: என் காதல் தீ... தீ வாசம் நீ...
கண் பார்த்தோம் வா... கை சேர்ப்போம் வா...
பல உயிர்கள் எரியும் உடல்கள் மாரியும்
பயணப்படுவது காதல்
காதல் சாதல்
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி
என் காதல் தீ... தீ வாசம் நீ...
கண் பார்த்தோம் வா... கை சேர்ப்போம் வா...
உடல்கள் இரண்டும் சேரும் முன்
உல்லம் இரண்டும் சேருமே
உடலின் வலியே உயிரை தொடுவது காதலே
இதயம் இரண்டு்ம் தூரம் தான்
இதல்கள் நான்கும் அருகில் தான்
இதல்கள் வலியே இதயம் தொடுவது காதலே
ஊசி போதும் ரெண்டு கண்களில் உயிரை குடித்தவளே நீ
உயரம் காட்டும் பூக்கள் இரண்டினில் உலகம் உடைப்பவள் நீ
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி
குழு: காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி
ஆ: உலகில் காதல் பழையது
உற்ற பொழுதே புதியது
எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது
உலகின் நெறுப்பு காதலே
உயிரில் இருப்பு காதலே
உண்மை காதல் உலகைவிடவும் பெரியது
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில் குளுங்கும் பூவிதுவே
பாலை வெயிலிலும் காணல் வெளியிலும் படரும் நிழில்லிதுவே
குழு: கண்டார் மயங்கும் வண்டார் மலரே
நின்றோர் மொழி சொல்லடி
உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்து
என்ன செழுமையடி
ஆ, குழு: பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது
என்ன செழுமையடி
ஆ: அதை மெத்தம் எடுத்து சித்தம் துடிக்குதடி
பெண் பாவாய் வா...
கண் பாவாய் வா...
செங்கோடாய் வா...
சென் தேனாய் வா...