சித்திரை நிலா ஒரே நிலா பரந்த வானோ
படைச்ச கடவுளு எல்லாமே ஒத்தையில
நிக்குதுடே...
நீ கூட ஒத்தையில நிக்கிரடே
எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசோ
தொட்டு வை மக்கா
(சித்திரை)
நீ கூட ஒத்தையில நிக்கிரடே
எட்டு வை மக்கா எட்டு வச்சு ஆகாசோ
தொட்டு வை மக்கா
மனிதன் நினைத்தால் வழி பிறக்கும்
மனதில் இருந்து ஒளி பிறக்கும்
புதைக்கின்ற விதையும்
முயற்சி கொண்டால் தான்
பூமியும் கூட தாழ் திறக்கும்
எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசோ
தொட்டு வை மக்கா
கண்களில் இருந்தே காட்சிகள் தோன்றும்
கலங்களில் இருந்தே தேசங்கள் தோன்றும்
துயரத்தில் இருந்தே காவியம் தோன்றும்
தோல்வியில் இருந்தே ஞானங்கள் தோன்றும்
சூரியன் மறைந்தால் விளக்கொன்று சிரிக்கும்
தோனிகள் கவிழ்ந்தால் கிளை ஒன்று கிடைக்கும்
சித்திரை நிலா ஒரே நிலா...
எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசோ
தொட்டு வை மக்கா
மரம் ஒன்று விழுந்தால் மறுபடி தலைக்கும்
மனம் இன்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும்
பூமியை திறந்தால் புதையலும் இருக்கும்
பூக்களை திறந்தால் தேன் துளி இருக்கும்
(மரம் ஒன்று)
நதிகளை திறந்தால் கலனிகள் செலிக்கும்
நாளையை திறந்தால் நம்பிகை சிரிக்கும்
நதிகளை திறந்தால் கலனிகள் செலிக்கும்
நாளையை திறந்தால் நம்பிகை சிரிக்கும்... ஓ... ஓ...
சித்திரை நிலா ஒரே நிலா
சித்திரை நிலா ஒரே நிலா...
நாளையை திறந்தால் நம்பிக்கு சிரிக்கும்...
அதோ அதோ ஒரே நிலா...