பெண்குழு : தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம் வெக்கத்தினாலே
ஒரு தாவணி தான் போட்டிருக்கு பூக்களினாலே
ஆண்குழு : ஹெய் பாட்டெடுத்து பாடுங்கடி நமகென்ன கவலை
நம்ம பேர் விளங்க சொல்லி சொல்லி அடிச்சிடு தவிலை
பெண்குழு : ஆசை வந்தா பாட்டு வரும் பாட்டு வந்தா ஆட்டம் வரும்
ஆண்குழு : போடு சக்க போடு இந்த பூலோகம் கைய தட்டும்
ஆண் : தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம் வெக்கத்தினாலே
ஒரு தாவணி தான் போட்டிருக்கு பூக்களினாலே
பெண்குழு : உஊ..ஊ... உ.ஊ..ஊ...
ஆண்குழு : ஹொய்யா..ஹொய்யா..ஹொய்யா..ஹொய்யா..ஹொய்யா..
ஹொய்யா..ஹொய்யா..ஹொய்யா..ஹொய்யா..ஹொய்யா..ஹொய்யா..
***
பெண்குழு : ஈர மழை மேகங்களே தூரல் போடுங்கள்
இந்த ஈச்ச மர கிளையினிலே ஊஞ்சல் ஆடுங்கள்
பெண் : ஆனை மலை முகடுகளை கடந்து வாருங்கள்
இந்த ஆல புழை ஓரத்திலே நடந்து பாருங்கள்
ஆண் : பூமிக்கு என்னென்ன தாகங்களோ பங்குனி மாதத்திலே
பூவைக்கு என்னென்ன மோகங்களோ பூ பூத்த காலத்திலே
பெண் : இந்த நீரும் அந்த வேரும் ஒன்று சேர்கின்ற நாளல்லவோ
பெண்குழு : ஈர மழை மேகங்களே தூரல் போடுங்கள்
இந்த ஈச்சமர கிளையினிலே ஊஞ்சல் ஆடுங்கள்
***
பெண்குழு : நேற்றுவரை ஏற்ற துணை நங்கை தேடினாள்
வெள்ளி நிலவெரிக்கும் ராத்திரியில் நாளும் வாடினாள்
ஆண் : கடல் புரத்து மீனிரண்டை கண்ணில் வாங்கினாள்
அதில் கனவுகளை பூட்டி வைத்து கன்னி ஏங்கினாள்
பெண் : ஆடைக்குள் நின்றாடும் சிற்றிடைதான் அச்சாரம் கேக்குதம்மா
அங்கங்கள் ஒவ்வொன்றும் வெப்பத்தினால் அங்கங்கு வேர்க்குதம்மா
ஆண் : இந்த நாளும் எந்த நாளும் இங்கு சந்தோஷ சங்கீதமே
பெண்குழு : வாலிபமே வாலிபே வாசல் தேடி வா
புது வசந்த விழா காண்பதற்கு விரைந்து ஓடிவா..
பெண்குழு : தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம் வெக்கத்தினாலே
ஆண் : ஹொய் ஹொய்
பெண்குழு : ஒரு தாவணி தான் போட்டிருக்கு பூக்களினாலே
ஆண் : ஹொய் ஹொய்
ஆண்குழு : பாடெடுத்து பாடுங்கடி நமகென்ன கவலை
ஆண் : ஹொ... ஹொ...
ஆண்குழு : நம்ம பேர் விளங்க சொல்லி சொல்லி அடிச்சிடு தவிலை
ஆண் : ஹொ... ஹொ...
பெண்குழு : ஆசை வந்தா பாட்டு வரும் பாட்டு வந்தா ஆட்டம் வரும்
ஆண்குழு : போடு சக்க போடு இந்த பூலோகம் கைய தட்டும்
ஆண் : ஏய்..
ஆண் &
ஆண்குழு &
பெண்குழு : தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம் வெக்கத்தினாலே
ஒரு தாவணிதான் போட்டிருக்கு பூக்களினாலே