பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்

ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல தலைகணமும் எனக்கு இல்ல

---
அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல
பழகின பாசையில படிப்பது பாவமில்ல
என்னமோ ராகம் என்னன்னமோ தாளம்
தலைய ஆட்டும் புரியாத கூட்டம்
எல்லாமே சங்கீதந்தான்...ஆஆஆ...
எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான்
சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கு அப்புறந்தான்
---
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
---
கவலை ஏதுமில்ல ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேரவேணும் அதுக்கு உம் பாட்டப் படி
என்னயே பாரு எத்தன பேரு
தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு
சொன்னது தப்பா தப்பா...ஆஆஆ...
சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னதப்பா
அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புரத்துல சொன்னதப்பா

----