வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா -
அதுஎன்னான்னு பாருங்கையா
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா -
அதுஎன்னான்னு பாருங்கையா
பட்டப்பகல் நேரங்கண்டு தூங்குறாளையா -
அந்திபட்டவுடன் எண்ணி எண்ணி ஏங்குறாளையா
கொட்டு முழக்கோடு தாலி கேக்குறாளையா -
சிட்டுக்குருவிகள் கொஞ்சுவதைப் பாக்குறாளையா
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா -
அதுஎன்னான்னு பாருங்கையா
வெள்ளித் தட்டில் சோறெடுத்து வைக்கிறாளையா -
சோத்தைவிட்டு விட்டுத் தரையிலே கை வைக்கிறாளையா
துள்ளி வந்த பொண்ணு இப்ப தயங்குறாளையா -
ஒருதூணைப் பாத்து மாப்பிள்ளைன்னு மயங்குறாளையா
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா -
அதுஎன்னான்னு பாருங்கையா
வயசு வந்த பெண் முகத்தைப் பாருங்களையா -
நீங்கமனசு வச்சு இந்தக் கேசைத் தீருங்களையா
திருமணத் தீர்ப்பெழுதி சொல்லுங்களையா -
கன்னம்சிவக்க நானும் பீஸ் கொடுப்பேன் சொல்லுங்களையா
வாங்க வாங்க கோபலைய்யா
வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா -
அதுஎன்னான்னு பாருங்கையா