ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை
ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை
காயம் செய்த ஊருக்கு
என் நியாயம் மட்டும் தெரியவில்லை
அறிந்த நான் செய்த பிழை
ஆண்டவர் தான் பொறுப்பாரே
அறியாமல் செய்த பிழை
அன்பே நீ பொறுப்பாயா
மன்னித்தே என்னை கொள்ள மாட்டய
ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை
ஏன் இந்த கதி ஏன் இந்த விதி
நொந்தேன் உயிர் நொந்தேன்
நான் கண்ட பழி நீ கொண்டு விட ஆவி வேந்தன்
என் பாவங்களில் நான் வெட்கமுற வில்லை அடி இல்லை
என் பாவங்களில் நீ பங்கு பெற நியாயம் இல்லை
பாதை தான் காணாமல் பட்டம் தான் விடுகின்றேன்
போதை தான் இல்லாமல் இன்றே நான் அழுகின்றேன்
பாவத்தின் பள்ளம் விட்டு எழுகின்றேன்
ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை
ஊர் பேசியதே யார் ஏசியதையும் நெஞ்சை சுட வில்லை
நீ துன்பமுற நான் கண்டுவர ஜீவன் இல்லை
என் தண்டனையில் நீ வாடுவது குற்றம் என் குற்றம்
என் பாவநிலை ஏழு ஜென்மம் வரை சுற்றும் சுற்றும்
போதைக்குள் பிறந்தாலும் என் காதல் பொய் இல்லை
சேற்றோடு பிறந்தாலும் தாமரையில் அழுக்கில்லை
வா பெண்ணே உன்னை விட்டால் வாழ்வில்லை
ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை
காயம் செய்த ஊருக்கு என் நியாயம் மட்டும் தெரியவில்லை
அறிந்த நான் செய்த பிழை ஆண்டவர் தான் பொறுப்பாரே
அறியாமல் செய்த பிழை அன்பே நீ பொறுப்பாயா
மன்னித்தே என்னை கொள்ள மாட்டயா
Thanks: Arafath