நெஞ்சாங்குழி ஏங்குதடி
நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்காதுடி
உன் நெனப்பு ஓங்குதடி
உள் உசுரு நோகுதடி
கண்ணீர் பட்டு கன்னம் ரெண்டும் வலிக்குதடி
உன்ன விட்டு நான் பிரிஞ்ச வாழ்க்க அத்து போகும்
அழகே கண்ணா விட்டு நீ மறஞ்சா
பார்வை செத்து போகும்
நித்தம் உன்ன எண்ணி எண்ணி
நேரம் வத்திப் போகும் அடியே
சுட்டு விரல் நீண்டு தூரம் செத்து போகும்
அடி உன்ன உன்ன நெனச்சுஎன் உசுர கையில் புடிச்சு
நான் நொந்து வெந்து கெடக்கேன்
சிறு நூலாம் படையா எளச்சு
சிறு நூலாம் படையா எளச்சு
நெஞ்சாங்குழி ஏங்குதடி
நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்காதுடி
அடிக்கிற காத்த நிறுத்தி வாய புடுங்க பாப்பேன்
வண்ண வண்ண சிறு பறவைக போல
உன்ன பத்தி கேப்பேன்
நீ அங்கே எங்கோ நடக்க
அடி இங்கே என் நிலம் துடிக்க
நீ மண்ணில் கண்ணீர் வடிக்க
அது விண்ணைச் சென்று நனைக்க
நீ தேட நான் வாட
அட உன்ன உன்ன நெனச்சு
என் உசுர கையில் புடிச்சு
நான் நொந்து வெந்து கெடக்கேன்
சிறு நூலாம் படையா எளச்சு
நெஞ்சாங்குழி ஏங்கும் ஏங்கும்
நெத்தி போட்டு வீணாய்ப் போகும்
நித்திரைய தொலைச்சா கண்ணு துடி துடிக்கும்
கண்ணுக்குள்ளே உன் முகம் தான்யா
வந்து வந்து போகும்
நெஞ்சு பட்ட பாடு சாமிக்கு சொன்னா
பாரம் கொஞ்சம் தூங்கும்
உன் ஆசிய நெஞ்சில் அழிக்க
நான் அமிலம் ஊத்திக் குடிக்க
உன் நினைவை எப்படி மறக்க
வான் நீலத்தை எது கொண்டு அழிக்க
நீ வாட நான் தேட
என் இரவை எல்லாம் கொளுத்தி
அதை எல்லா திசையிலும் செலுத்தி
நான் உயிரோடுல்லத்தை உணர்த்தி
உயிர் மீட்பேன் உன்னை மலர்த்தி
உயிர் மீட்பேன் உன்னை மலர்த்தி