Nanbaa nanbaa

நண்பா நண்பா
Year
Language

நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா
நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா
உனை நீ தாழ்வாய் பார்க்காதே
அட நீயே உன்னிடம் தோற்காதே
எதுவும் முடியும் என்று நினை
நீ எழுந்து நடக்கும் ஏவுகணை
நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா

நண்பா நண்பா உன் நெஞ்சில் எழுதடா
வானம் நோக்கி நீ வளரும் விழுதடா
தயக்கம் என்பது சொந்த சிறை
அதில் தங்கி கிடப்பது உந்தன் குறை
அதிர்ஷ்டம் விற்பது கடவுள் கடை
உன் முயற்சி ஒன்றே அதற்கும் விலை
நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா

naṇbā naṇbā nī kŏñjam keḽaḍā
nāmum jĕyippom ĕṉa nambi vāḻaḍā
naṇbā naṇbā nī kŏñjam keḽaḍā
nāmum jĕyippom ĕṉa nambi vāḻaḍā
uṉai nī tāḻvāy pārkkāde
aḍa nīye uṉṉiḍam toṟkāde
ĕduvum muḍiyum ĕṇḍru niṉai
nī ĕḻundu naḍakkum evugaṇai
naṇbā naṇbā nī kŏñjam keḽaḍā
nāmum jĕyippom ĕṉa nambi vāḻaḍā

naṇbā naṇbā uṉ nĕñjil ĕḻudaḍā
vāṉam nokki nī vaḽarum viḻudaḍā
tayakkam ĕṉbadu sŏnda siṟai
adil taṅgi kiḍappadu undaṉ kuṟai
adirṣṭam viṟpadu kaḍavuḽ kaḍai
uṉ muyaṟci ŏṇḍre adaṟkum vilai
naṇbā naṇbā nī kŏñjam keḽaḍā
nāmum jĕyippom ĕṉa nambi vāḻaḍā