முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பாவை உன் மேனி காதல் வீணை
காளை என் கைகள் மீட்டும் வேளை
என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய்
அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய்
ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம்
அது தாங்காமல் உன் மேனி போராடலாம்
சந்தோஷம் தாங்காமல் தள்ளாடும் நேரத்தில்
என் மேனி சாயாமல் நீ தாங்கலாம்
அன்பே… லால்ல லா லா லா
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
தேகம் தண்ணீரில் நீந்தும் போது
நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு
மீன் போல நான் மாறி விளையாடவா
அலை நீர் போல உன்மீது நான் மோதவா
என் மேனி நோகாமல் விளையாடலாம்
இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம்
தாளங்கள் நான் போட நாணங்கள் பறந்தோட
தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம்
அமுதே… ராப்ப பா பா பா
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்