Muttu mani maalai

முத்து மணி மாலை
Year
Language

ஆண் : முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டு விட்டுப் போராட

ஆண் : உள்ளத்துல நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே

ஆண் : முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

(இசை) சரணம் - 1

பெண் : கொலுசுதான் மெளனமாகுமா
மனசு தான் பேசுமா

ஆண் : மேகந்தான் நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா

பெண் : நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே

ஆண் : வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே

பெண் : தாழம்பூவுல வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா..

ஆண் : முத்து மணி மாலை

பெண் : என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

ஆண் : வெட்கத்துல சேலை

பெண் : கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

(இசை) சரணம் - 2

ஆண் : காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே

பெண் : கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே

ஆண் : நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு நாந்தானே

பெண் : அத்திமரப் பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீ தானே

ஆண் : ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற

பெண் : முத்து மணி மாலை
என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

பெண் : உள்ளத்துல நீ தானே
உத்தமரும் நீதானே
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே

ஆண் : ஒரு நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே

āṇ : muttu maṇi mālai
ŏṉṉat tŏṭṭut tŏṭṭut tālāṭṭa
vĕṭkattula selai
kŏñjam viṭṭu viṭṭup porāḍa

āṇ : uḽḽattula nīdāṉe
uttami uṉ perdāṉe
ŏru nandavaṉap pūdāṉe
pudu sandaṉamum nīdāṉe

āṇ : muttu maṇi mālai
ŏṉṉat tŏṭṭut tŏṭṭut tālāṭṭa

(isai) saraṇam - 1

pĕṇ : kŏlusudāṉ mĕḽaṉamāgumā
maṉasu tāṉ pesumā

āṇ : megandāṉ nilavai mūḍumā
mavusu tāṉ kuṟaiyumā

pĕṇ : nesappaṭṭu vanda pāsak kŏḍikku
kāsippaṭṭu tanda rāsāve

āṇ : vākkappaṭṭu vanda vāsamalare
vaṇṇam kalaiyāda rosāve

pĕṇ : tāḻambūvula vīsum kāttula
vāsam teḍi māmā vā..

āṇ : muttu maṇi mālai

pĕṇ : ĕṉṉat tŏṭṭut tŏṭṭut tālāṭṭa

āṇ : vĕṭkattula selai

pĕṇ : kŏñjam viṭṭuviṭṭup porāḍa

(isai) saraṇam - 2

āṇ : kālile poṭṭa miñji tāṉ
kādula pesude

pĕṇ : kaḻuttula poṭṭa tāli tāṉ
kāviyam pāḍude

āṇ : nĕtticcuṭṭiyāḍum uccandalaiyil
pŏṭṭuvaccadāru nāndāṉe

pĕṇ : attimarap pūvum accappaḍumā
pakkattuṇaiyāru nī tāṉe

āṇ : āsai peccula pādi mūccula
lesā tegam sūḍeṟa

pĕṇ : muttu maṇi mālai
ĕṉṉat tŏṭṭut tŏṭṭut tālāṭṭa
vĕṭkattula selai
kŏñjam viṭṭuviṭṭup porāḍa

pĕṇ : uḽḽattula nī tāṉe
uttamarum nīdāṉe
idu nandavaṉap pū tāṉe
pudu sandaṉamum nīdāṉe

āṇ : ŏru nandavaṉap pū tāṉe
pudu sandaṉamum nīdāṉe