கோட்டையிலே... ஒரு ஆல மரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப் புறா
கோட்டையிலே ஒரு ஆல மரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப் புறா
கட்டிய கூட்டினில் உறவுடனே தினம்
களித்திருக்கும் அந்த வெள்ளை புறா
கோட்டையிலே ஒரு ஆல மரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப் புறா
வெள்ளை புறாவின் குடும்பத்திலே வந்து
சேர்ந்ததம்மா ஒரு கள்ளப் புறா
வெள்ளை புறாவின் குடும்பத்திலே வந்து
சேர்ந்ததம்மா ஒரு கள்ளப் புறா
கள்ளப் புறாவின் செயலாலே இன்று
கலங்குதம்மா ஒரு சின்னப் புறா
கோட்டையிலே... ஒரு ஆல மரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப் புறா
கண்ணீர் கடலில் படகு விட்டு
கரை கடந்ததம்மா வாழ்ந்த கிளையை விட்டு
வண்ண மலர் காலின் பின்னலிலே
நடை வாடுதம்மா தங்கை என்னும் புறா
வாடுதம்மா தங்கை என்னும் புறா
கோட்டையிலே... ஒரு ஆல மரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப் புறா
உள்ளவர் வீட்டினினுக்கே உறவு வரும்
அந்த உறவு வந்தால் வீட்டில் பிரிவு வரும்
உள்ளவர் வீட்டினினுக்கே உறவு வரும்
அந்த உறவு வந்தால் வீட்டில் பிரிவு வரும்
பிரிந்திருந்தால் நெஞ்சில் ஏக்கம் வரும்
அதன் பின்பு வரும் பாசம் என்றும் வரும்
கோட்டையிலே... ஒரு ஆல மரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப் புறா
கோட்டையிலே...