பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு
தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மற்றும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்.
யார் விழியில் யார் வரைந்த
கனவோ
பாதியிலே கலைந்தால்
தொடராதோ
ஆள் மனதில் யார் விதைத்த நினைவோ
காலமதை சிதைத்தும் மறக்காதோ
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு
தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மற்றும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்.
ஒ ஹோ ஹோ
வீழும் உந்தன் கண்ணீர் துளி கரையும் அந்த
மாயம் என்ன
இதழைச் சேரும் முன்னே காயம் ஆறும்
இந்த புன்னகைகள்
உரைக்கும் முன்னே காதல் ஒன்று
மரித்துப் போன சோகம் என்ன
மரிக்கும் முன்னே உதிர்ந்து போன
முத்தம் ஏராளம்
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு
தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மற்றும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு
தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மற்றும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்