சின்னமணி பொண்ணுமணி
சிரிச்சாக்க கோயில் மணி
உன்னைப் பெத்த ராசவுக்கு
அவதாண்டா கண்ணின்மணி
பெத்தெடுத்த தாய் ஒருத்தி
நீ தத்தெடுத்த தாய் ஒருத்தி
இந்த இருவருக்கும்
பிள்ளை நீ ஒருத்தன்
சின்னமணி பொண்ணுமணி
சிரிச்சாக்க கோயில் மணி
உன்னைப் பெத்த ராசவுக்கு
நீ தாண்டா கண்ணின்மணி
பெத்தெடுத்த தாய் ஒருத்தி
நீ தத்தெடுக்க வச்சுப்புட்டா
அந்த இருவருக்கும்
கேள்வி நான் ஒருத்தன்
சின்னமணி பொண்ணுமணி
சிரிச்சாக்க கோயில் மணி
உன்னைப் பெத்த ராசவுக்கு
அவதாண்டா கண்ணின்மணி
எத்தனையோ வாசலிலே
கால வச்சேன் அப்போது
வச்சதுக்கு தண்டனைய
அனுபவிச்சேன் இப்போது
எத்தனையோ வாசலிலே
கால வச்சேன் அப்போது
வச்சதுக்கு தண்டனைய
அனுபவிச்சேன் இப்போது
நானாக போட்ட விதை
முளைச்சுதடா நேத்து
நீயேனும் திருந்தி நட
என் கதையப் பார்த்து
பொய் மான புள்ளி
மானுன்னு நம்பிகிட்டா
ஒரு முள்ளால இவ
மாலைய கட்டி வச்சா
இதைத் தோளில் தாங்கும் துயரம்
நெஞ்சு பொறுக்கலடா
சின்னமணி பொண்ணுமணி
சிரிச்சாக்க கோயில் மணி
உன்னைப் பெத்த ராசவுக்கு
நீதாண்டா கண்ணின்மணி
ஊருக்குள்ள வீதியிலே
விளையாடப் போயிருக்கேன்
உன்னுடைய வாழ்க்கையிலே
விளையாட நான் வரல
ஊருக்குள்ள வீதியிலே
விளையாடப் போயிருக்கேன்
உன்னுடைய வாழ்க்கையிலே
விளையாட நான் வரல
தீ மேல கைய வச்சு
சுட்டுகிட்ட பாவம்
உன் மேல கோபப்பட்டா
அதில் என்னய்யா நியாயம்
பொன் மான நீ
பொய்யின்னு சொல்லுறியே
என் அம்மானே என்னை
சொல்லுல கொல்லுறியே
என் வாழ்வும் தாழ்வும்
எனது மன்னவன் உன்னிடமே
ஆ ஆ சின்னமணி பொண்ணுமணி
சிரிச்சாக்க கோயில் மணி
உன்னைப் பெத்த ராசவுக்கு
அவதாண்டா கண்ணின்மணி
பெத்தெடுத்த தாய் ஒருத்தி
உன்ன தத்தெடுத்தேன் நான் ஒருத்தி
எங்க இருவருக்கும் பிள்ளை நீ ஒருத்தன்
ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹும்